Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பள்ளி கொண்டிருக்கும், பள்ளி கொண்டீஸ்வரர்

பரந்தாமனான மகாவிஷ்ணுவைத்தான் பள்ளி கொண்ட திருக் கோலத்தில் தரிசிக்க முடியு ம். ஆனால், சுருட்டப்பள்ளிக் குச் சென்றால் பரமேஸ்வர னும் பள்ளி கொண்டிருக் கும் திருக்கோலத்தை தரிசிக்க லாம்.

தமிழக – ஆந்திரா எல்லை பகுதி யில் ஊத்துக்கோட்டை அருகே இந்த சுருட்டப்பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் `பள்ளி கொண்டீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இங்கு சிவ பெருமான், உமா தேவி யின் மடியில் தலை வைத்துப் படுத்தி ருக்கும் திருக்கோலத்தை காணும்போது நம்மை அறியாமலேயே பக்தி பரவசத்தில் திளை க்கிறோம். பள்ளி கொண்டுள்ள இறை வனுக்கு அருகில் மகா விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், பிருகு முனிவர், பிரம்மா ஆகியோர் வணங்கி நிற்கிறார்கள்.    அவர்களுக்கு அருகில் சூரிய, சந்திரர்கள், குபேரன், சப்த ரிஷிகள் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள், கின்னரர், கிம்புருடர் போன்றோரும் சிவனை வணங்கி பிரார்த்தனை செய்கிறார்கள்.

கோவில் தல வரலாறு

தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தபோது அமு தம் வருவதற்கு முன் ஆலகால விஷம் வந்தது. அனைவரும் அஞ்சி ஓடியபோது மகாவிஷ்ணு அருகில் சென்றார். விஷ நெடி தாக்கியதில் அவரது மேனி நீல நிறமானது. இதுபற்றி அனை வரும் சிவபெருமானிடம் முறையிட்டார்கள்.

அதன்தொடர்ச்சியாக சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந் தினார். பக்கத்தில் இருந்த பார்வதிதேவி, பதறிப் போனாள். தன் கணவனின் கழுத்தை இறுக்கி பிடித்தாள். இதனால் ஆலகால விஷம் அவரது கழுத்தைத் தாண்டாமல் கண்டமாகிய கழுத்தில் நீல நிறத்தில் நின்று விட்டது. சிவனும் `திருநீலகண்டன்’ ஆனார்.

இதன்பிறகு, சிவபெருமானும் அன்னை பார்வதிதேவியும் கை லாயம் நோக்கி புறப்பட்டார்கள். செல்லும் வழியில் சோலைகள் நிறைந்த இன்றைய சுருட்டப்பள்ளியில் இருவரும் தங்கினார் கள். விஷ மயக்கம் தீராமல் இருக்கவே… சிவபெருமான், உமா தேவியின் மடியில் தலை வைத்து சிறிது நேரம் கண் அயர்ந்தார்.

பரமன் பள்ளி கொண்டது தெரிய வந்ததும் இந்த அதிசயத்தைப் பார்த்து வணங்கத் தேவர்கள் அனைவரும் சுருட்டப்பள்ளிக்கு விரைந்து வந்து விட்டார்கள். அவர்களிடம் நந்தி பகவான், மயக்கம் தெளிந்தபின் பரமேஸ்வரனை வழிபடலாம் என்று அறிவுறுத்தினார்.

தன்னை நாடி வந்தோருக்காக சிவபெருமான் இந்த மாலைக் கால த்தில்-சந்தியா நேரத்தில் எழுந்தருளினார். ஆனந்த நடனம் ஆடி னார். தேவர்கள் அவரை தரிசித்து மகிழ்ந்தார்கள் என்கிறது இக் கோவில் தல வரலாறு. பள்ளி கொண்டுள்ள சுருட்டப்பள்ளி இறை வனை தேடி வந்து வணங்கினால் சகல தோஷமும் நீங்கும் என்கிறார்கள்.

(இணையத்தில் இருந்ததை
இமையத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: