Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களை திருடிகளாக்கும் “கிளப்டோமேனியா” என்னும் மனோவியாதி

கிளப்டோமேனியா’ என்னும் மனோவியாதியால் பாதிக்கப் பட்டவர் கள் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், மிகப் பிரபல மானவர்களாக இருந்தாலும் மிகச்சா தாரண பொருளைக்கூட திருடக்கூடிய கட்டாய மன நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த மனோவி யாதி உள்ளவர்கள் திருடுவதை வேண்டுமென்று விரும்பிச் செய்வதில்லை. இவர்கள் திருடும் பொருள் மிகக் குறைந்த மதிப்புள்ளதாக இருப்பினும் அதை விரும்பி விட்டால் கண்டிப்பாகத் தனது உடமை யாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற உள்ளுணர்வு உந்து தலினால் திருடுவர். அவ்வாறு திருடும்போது அவர்கள் அத்திரு ட்டை ஒரு குற்றமாகவே கருதுவதில்லை” என்கி றார், மனநல மருத்துவர் பான்சேல்.

பிரபலமான `திருடி’ பற்றியும் அவர் சொல்கிறார்:

“சின்னத்திரை நடிகையான அவர் ஒரு பிரபலமான தொழில் அதிபரை மணம் புரிந்தவர். பலதரப்பட்ட பார்ட்டிகள், விருந் துகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போன்ற களியாட்ட ங்களை உள்ளுரில் மட்டுமன்றி வெளி நாடுகளுக்கும் சென்று அனுபவித்தவர். பிறர் பொறாமைப்படும் அளவிற்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைந்திருந்தாலும், இவருக்கு இருக்கும் கிளப்டோமேனியா வியாதியினால் நண்பர் மற்றும் விருந்தினர் வீடுகளில் எதையாவது `கைவைத்து’ விடுவார். அல்லது பொரு ட்கள் வாங்கப் போகும் கடைகளில் தனக்குப் பிடித்தமான ஒரு பொருளைக் கண்டு விட்டால் அதை உடனே திருடி விடுவார். இந்த செயல் அவரது குடும்பத்தி னருக்கும் தெரியும். ஆனாலும் அந்த நடிகை தனக்கு `கிளப்டோ மேனியா’ என்கிற மனோவியாதி இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வதே இல்லை. இவர் தான் திருடிய சின்னஞ்சிறு பொருட் களை யெல்லாம் ஒரு சூட்கேஸில் வைத்து பத்திரப் படுத்தி பார்த்துப்பார்த்து பெருமிதம் கொள் கிறார்.

இத்தனைக்கும் அவர் திட்டமிட்டெல்லாம் திருடுவது கிடையாது. அவர் திருடிய பொருள் அவருக்கு அத்தியாவசியமான பொரு ளாகவும் இருக்காது. இருப்பினும் ஏதோ ஒரு வலிமையான உள் ளுணர்வு இவர் பெரிய பணக்காரியாக இருந்தாலும் சிறிய அற்பப் பொருளையும் திருடும்படிச் செய்து, அதனைச் செய்வதில் பெருமையும் கொள்கிறது.

“ஒருசில பொருட்கள் மிகக்குறைந்த மதிப்புள்ளவையாய் இருந் தாலும் அவர்கள் மனதுக்குப் பிடித்து விட்டால் அவற்றை அவர் களது உடைமையாக்கிக் கொள்ளத் துடிக்கிறார்கள். அவை அடுத் தவர் பொருளாக இருந்தா லும் அதனை எடுத்துக் கொள்ள தங்க ளுக்கு உரிமையுண்டு என்று நினைக்கும் இவர்கள், அவை கிடைக் காமல் போகும் தருணத்தில் மிகவும் மனக்கலக்கமும் துயரமும் கொண்டு அவதிப்படுவார்கள்” என்கிறார்.

மேலும் டாக்டர் பான்சேல் கூறுகையில், “கிளப்டோமேனியா என் கிற இந்த திருட்டு மனோவியாதி முதலில் 19-ம் நூற்றாண்டில் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டு மனோ வியாதி என்று பதிவு செய்யப்பட்டது. இந்த மனோவியாதி க்கு உண்மையான மூல காரணம் என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை” என்றும் கூறுகிறார்.

இந்த திருட்டு வியாதி பெரும்பாலும் தங்களுக்குத் தேவையான வற்றைச் சேகரிக்கும் மனோநிலையில் உள்ள 20 வயது முதல் 30 வயதுக்குள்ளான இளம்பெண்களிடம் அதிகமாகக் காணப் படுகிறது. புதியபொருட்களை வாங்கும் ஆசை இந்த திருட்டு மனோ வியாதிக்கு மூலகாரணமாக அமைகிறது.

(இணையத்தில் இருந்ததை
இமையத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: