Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“காதல் மன்னன்” ஜெமினி கணேசனின் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கிய திருப்பங்கள்

தமிழ்த் திரை உலகில் எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும், புகழின் சிகரத்தில் இருந்த அதே காலகட் டத்தில் தன் அழகாலும், இயற்கை யான நடிப்பாலும் ரசிகர்களின் உள் ளம் கவர்ந்தவர், ஜெமினி கணேசன். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணே சன் ஆகிய மூவ ரும், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் போல கலை உலக மூவேந்தர்களாகத் திகழ்ந் தார்கள்.
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் நாடக மேடையில் இருந்து திரை உலகத் துக்கு வந்தவர்கள். ஜெமினி கணேச னோ, நாடக அனுபவம் இல்லாதவர். கல்லூரி விரிவுரையாளர் உத்தியோகத்தை உதறித் தள்ளிவிட்டு, சினிமா நடிகரானார்.  வசதியான குடும்ப த்தில் பிறந்து, இளமையில் செல்வ செழிப்போடு வாழ்ந்தவர் ஜெமினி கணேசன்.
ஜெமினிகணேசனின் தந்தை பெயர் ராமசாமி. தாயார் கங்கம் மா. புதுக்கோட்டையில் நல்ல வசதிகளுடன் வாழ்ந்த குடும் பம். இந்த தம்பதியருக்கு 2 ஆண் குழந்தைகள். முதல் குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்து விட்டது. இரண்டாவதாக பிற ந்தவர்தான் ஜெமினி கணேசன் . 1920_ம் ஆண்டு நவம்பர் மாதம் 17_ந்தேதி பிறந்தார்.

பெற்றோர் சூட்டிய பெயர் கணேஷ்.  ஜெமினி கணேசன், அவரு டைய சின்ன தாத்தா நாராயண சாமி அய்யர் வீட்டில் வளர்ந்தார். நாராயணசாமி அய்யர் சிறந்த கல்வியாளர். புதுக் கோட்டை மகா ராஜா கல்லூரியில் முதல்வராக பணியாற்றியவர். (இவரு டைய மகள் முத்துலட்சுமி, பல சாதனைகளைப் புரிந்தவர்.

இந்தியாவிலேயே டாக்டருக்குப் படித்துத் தேறிய முதல் பெண் மணி. 1929_ல் சென்னை சட்டசபை உறுப்பி னரானார். சட்ட சபைக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட முதல் பெண் மணி என்ற பெரு மையைப் பெற்றார். தேவதாசி முறையை ஒழிக்க வகை செய் யும் சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தார்.

சுந்தரம் ரெட்டியை கலப்புத் திரு மணம் செய்து, `டாக்டர் முத்து லட்சுமி’ ரெட்டி ஆனார்.)     ஜெமினிகணேசன் புதுக் கோட்டை நெல்லுமண்டி தெரு வில் இருந்த குலமது பாலையா பிரைமரி ஸ்கூலில் பள்ளிப் படிப்பை தொடங்கினார்.
ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசுவாமி வசதி படைத் தவராக இருந்ததால், ஜெமினியை ராஜகுமாரனைப் போல குதிரைமீது அமர வைத் து பள்ளிக்கூடத்துக்கு ஊர்வலமாக அழை த்து சென்றார். அந்த பள்ளியில் நிர்வாகி பாலை யா என்பவர் ஜெமினிகணேசனின் வலது கையை பிடித்து வெள்ளித் தட்டில் தங்க காசால் “ஓம்” என்று எழுத வைத்தார்.

இவ்வாறு ஜெமினியின் படி ப்பு சிறப்பாகத் தொடங் கியது. இளம் வயதில் ஜெமி னி முதன் முதலாக பார்த்த தமிழ்ப்படம் டி.பி.ராஜ லட் சுமி _டி.வி.சுந்தரம் நடித்த “வள்ளித்திருமணம்”. 48 பாடல் கள் கொண்ட அந்த சினிமா படத்தின் எல்லா பாடல்களையுமே ஜெமினி மனப்பாடம் செய்து விட்டார்.

அந்த பாடல்களை பாடி ரசிப் பார். இதை கேள்விப்பட்ட புதுக் கோட்டை திவான் ஜெமினியை வரவழைத்து, வள்ளித் திரும ணம் பாடல்களை எல்லாம் பாடச் சொல்லி கேட்டு வெள் ளிக் கோப்பை பரிசு கொடுத்தார். ஜெமினிக்கு 10 வயதாகும்போது தந்தையும், சின்ன தாத்தாவும் காலமானார்கள்.
இதனால் ஜெமினி மிகவும் வேதனை அடைந்தார். அத் தை முத்து லட்சுமி அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று, ராஜா முத்தையா செட்டியார் உயர் நிலைப் பள்ளியில் 7_ம் வகுப்பில் சேர்த்து படிக்க வைத்தார். பின்னர் ராமகிருஷ்ணா மிஷ ன் பள்ளியில் சில காலம் படித்தார்.

ஐ.ஏ.எஸ். பரீட்சை எழுதி மகன் கலெக்ட ராக வேண்டும் என்பது ஜெமினியின் தாயார் கங்கம்மாவின் ஆசை. ஆனால் ஜெமினி யோ `எம்.பி.பி.எஸ்’ படிக்க ஆசைப் பட்டார். ஆனால் ஒரு டிகிரி முடித்த பின்னர் சேரலாம் என்று அத்தை முத்துலட்சுமி யோச னை சொல்லவே ஜெமினி கணேசன் சென்னை கிறிஸ்தவ கல் லூரியில் படிப்பைத் தொடர்ந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கி படித் தார். விளையாட்டு, பேச்சு, பாட்டு என்று பல திறமைகளை வளர்த்துக் கொண்டார்.   1940_ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெமினியின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஜெமி னிக்கு அப்போது 20 வயது. அவருக்கு திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்து, குடும்பத்தினர் பெண் பார்த்தா ர்கள்.

அலமேலு என்கிற பாப்ஜியை பார்த்து முடிவு செய்தார்கள். ஜெமி னியை “எம்.பி.பி.எஸ்” படிக்க வைப்பதாக, பாப்ஜியின் அப்பா கூறினார். அது ஜெமினிக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. ஜுன் மாதம் 30_ந்தேதி ஜெமினி_ பாப்ஜி திருமணம் நடந்தது.
ஜெமினிக்கு சரியான வேலை கிடைக்காததால் திரும ணத்துக்கு பிறகும் பாப்ஜி பிறந்த வீட்டிலேயே இருந்தார்.
மருத்துவ படிப்பு கனவு உருவான வேகத்திலேயே தகர்ந்து போனது. திருமணம் ஆன ஒரு மாதத்தில் பாப் ஜியின் அக்காள் கணவர் மரணம் அடைந்தார். அடுத்தபடியாக அக்காளும் இறந் தார். அடுத் தடுத்து நிகழ்ந்த இரண்டு மரணங்கள் அதிர்ச்சியாக அமைந்தன. ஜெமினி _ பாப்ஜி தம்பதிகளுக்கு குழந்தை (`ரேவ தி’) பிறந்தது.

குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய சூழ்நிலை ஜெமினிக்கு ஏற்பட்டது. வேலை தேடினார். அவர் ஏற்கனவே படித்த தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரி யிலேயே ரசாயன விரிவுரையாளர் வேலை கிடைத் தது. கல்லூரி விரிவு ரையாளர் வேலையை மகிழ்ச்சி யுடன் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், ஜெமினி கணேசன் வாழ்க்கையில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டது.

(இணையத்தில் இருந்ததை
இமையத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: