முன்பதிவு வசதி இல்லாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்வத ற்கான டிக்கெட்டை, மொ பைல் போன்களின் மூலம் பெறலாம் என்று இந்தியன் ரயில்வே (இன்பர் மேசன் சிஸ்டம் பிரிவு) பொது மேலாளர் எஸ்.எஸ். மாத்தூர் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுத்துறை நிறுவன ங்களுக்கான கருத் தரங்கில் கலந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மாத்தூர் கூறியதா வது, இனிமேல், முன்பதிவு வசதி பெட்டிகளில் பயணம் செய்வதற் கான டிக்கெட்டை வாங்க, இனி நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை. மொபைல்போன் மூலமாக, டிக்கெட்டை வாங்க முடியும் என்று அவர் தெரிவித் தார். இதற்கான செயல் பாடுகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டி யுள்ளதாகவும், விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், மேலும், இது அனைத்துவிதமான (அடிப்படை வசதி மொபைல் போன்களி லும்) மொபைல்போனிலும் செயல் படத்தக்க வகையில் வசதி மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )