எந்திரன் 2 படத்தை தயாரிக்கும் பணியில் சன் பிக்சர்ஸ் மும்முரமாக உள்ளதாகவும், இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி யும் சம்மதித்துவிட்டார் என் றும் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா தெரி வித்துள்ளார். இந்தியாவில் அதிக பொருட் செலவில் உருவாகி, 80ஆண்டு சினிமா வரலாற்றில் இல்லாத அளவு பெரும் வசூலைக் குவித்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன்.
அதிகாலை 4.00 மணிக்கெல்லாம் முதல் காட்சி போடப்பட்ட ஒரே திரைப்படம் அநேகமாக எந்திரனாகத்தான் இருக்கும். இந்தியாவின் வடகோடியிலும்
இந்தப் படம் மிகப்பெரிய வசூலுடன் ஓடி மூக்கில் விரல் வைக்க வைத்தது. பொழுது போக்கின் உச்ச மாகக் கருதப்படும் இந்தப் படம், தரத்தில் வேறு எந்தப் படமும் நெருங்க முடியாத உயரத்தில் உள்ளது.
எந்திரன் படம் வெளி யானதிலிருந்தே, இதன் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஷங்கரும் அதற் கேற்பவே இப்படத்தை முடித்திருந்தார். அருங் காட்சி யகத்தில் வைக்கப்பட்டிருக்கும்
ரோபோ ரஜினிக்கு மீண்டும் உயிர்ப்பெற்று பேசுவது போல க்ளைமாக்ஸ் அமைந் திருந்தது. ஆனால் பொது வாகவே, ஒரு படம் முடிந்ததும் அத்தோடு அந்த நினைப்பையே துடைத் துவிட்டு, அடுத்த படத் துக்குப் போகும் இயல் புடையவர் ரஜினி.
எனவே அவர் இந்த இரண்டாம் பாகத்துக்கு சம்மதித்துள்ளாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. ஆனால் இப்போது
எந்திரன் -2-ம் பாகம் தயா ராவது கிட்டத்தட்ட உறுதி யாகியுள்ளது. இதற்கு ரஜினி யும் சம்மதித்துவிட்டதாக சன் பிக்சர்ஸ் சிஇஓ ஹன் ஸ்ராஜ் சக்ஸேனா தெரி வித்துள்ளார். அவர் கூறுகை யில், எந்திரனுக்கு பிறகு சன் பிக்சர்ஸின் நேரடித் தயா ரிப்பு என்றால் அது எந்திரன் 2-ம் பாகமாகத்தான் இருக்கும். அதைப் பற்றி ரஜினி சாரிடம் பேசிவிட்டோம். ஷங்கரும் கதையுடன் தயாராக இருக் கிறார்.
கண்டிப்பாக எந்திரன் பட த்தின் பட்ஜெட்டை இந்த இரண்டாம் பாகம் தாண்டி விடும். அந்த அளவுக்கு பிரமாண்டமாகவும், இந்தி யாவில் யாருமே எதிர்ப் பார்க்காத அளவுக்கு புது மை யாகவும் சர்வதேச அளவிலான படமாக இந்த எந்திரன் பாகம் 2 அமையும். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும், என்றார். ரஜினி இப்போது கேஎஸ் ரவிக்குமார் இயக் கத்தில் ராணா படத்தில் நடிக் கிறார்.
அந்தப் படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது வரும் பொங் கலுக்கு ரிலீஸாகிறது. அதன் பிறகு எந்திரன் 2 பணிகள் ஆரம் பமாகும் என்கிறார்கள். ஆனால் எந்திரன் 2 குறித்து ரஜினி இது வரை எங்குமே வாய் திறக்க வில்லை. எனவே அவர் சொன் னால் தான் அது இறுதி யான முடிவாக இருக்கும்! எல்லாம் சரி, மற்ற நடிகர்களை வைத்தும் நேரடிப் படம் எடுக்கும் `ஐடியா` சன் டிவியிடம் இல்லையா?
(இணையத்தில் இருந்ததை
இமையத்தில் வைக்கிறோம்
இமையத்தில் வைக்கிறோம்
we also waiting