Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணிணிகளுக்கு முன்னோடி : தட்டச்சு எந்திரம் (Type Writer)

எழுத்துக்களையும், எண்களையும் தட்டச்சு செய்ய `டைப் ரைட்டர்’ என்கிற தட்டச்சு எந்திரம் உதவி செய்யுது. இதன்மூலம் தகவல்களை ஆவணப்படுத் துவதில் ஒரு ஒழுங்குமுறை தோன் றியது. ஆனால், இந்த தட்டச்சு எந்திரத்தை எதற் காக கண்டு பிடிச்சா ங்கன்னு தெரிஞ்சா, நீங்க ஆச்சரிய ப்படுவீங்க!

பார்வையற்றவர்களுக்கு உத வுற மாதிரி தான் முதன் முதல்ல தட்டச்சு எந்திரத்தை வடிவமைச்சாங்க. முதன்முதலாக அமெரிக் காவுல 1827-ம் ஆண்டு வில்லியம் பர்ட் என்பவர் ஒரு தட்டச்சு எந்திரத்தை உருவாக்கினார். அது `டைப் போகிராபர்’னு அழைக் கப்பட் டுச்சு. ஆனால், அதனுடைய மாதி ரி எதுவும் இப்ப கிடை யாது. அவருக்குப் பிறகு பல ஆராய்ச் சியாளர்கள் தட்டச்சு எந்திர த்தை வடிவமைக்க முயற்சி செஞ் சாங்க. 1873-ம் ஆண்டு அனை வரும் பயன்படுத்தக் கூடிய வகை யிலான தட்டச்சு எந்திரம் வடிவ மைக்கப்பட்டது. கிறிஸ்டோபர் ஷோவ்ஸ், சாமுவேல் சோல், கார்லோஸ் கிளிட்டன் ஆகிய மூன்று அமெரிக்கர்களும் சேர்ந்து அதை தயாரிச்சாங்க. அதன்பின்னர் பல்வேறு வசதி களுடன் தட்டச்சு எந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. கணினி களுக்கு முன்னோடி யா இதைச் சொல்றாங்க. தற் போது இதன் பயன்பாடுகள் குறைவா இருந்தாலும், கணி னியை எளிதா பயன் படுத்த தட்டச்சு எந்திரம் உதவுது.

இணையத்தில் இருந்ததை
இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: