Monday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணினியை பாதுக்காக்க அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் புதிய பதிப்பு 6.0.1000

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் நம்முடைய கணினிக்கு ஆபத்தும் வளர்ந்து வருகி றது. தினம் தினம் புது புது வைரஸ் களும், மால்வேர்களும் உரு வாகிக் கொண்டே (சாரி உருவாக்க படு கிறது) இருக்கிறது.  இதனை தடுக்க நாம் பல ஆன்டிவைரஸ்களை உப யோகபடுத்து கிறோம். இணையத்தில் ஏராளமான இலவச ஆன்ட்டி வைரஸ் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் உபயோக படுத்த படுகிறது. இப்பொழுது இந்த ஆண்ட்டி வைரசில் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. அதாவது 5.1.889 என்ற பதிப்பில் இருந்து 6.0.1000 வெளியிடப்பட்டுள்ளது.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
  • அவஸ்ட் மென்பொருளை அனைவரும் உபயோக படுத்த காரணமே வைரஸ் மற்றும் மால்வேர்களை சரியாக கண்ட றிந்து அளிக்கிறது.
  • கணினியில் ஏதாவது புதிய வைரஸ் நுழைய முயன்றாலே தகவல் தெரிவித்து அதை அழித்து விடுகிறது.
  • இணையத்தில் சில மால்வேர் பாதிக்க பட்ட தளங்களுக்கு சென்றால் நமக்கு தகவல் தருகிறது.
  • ஹார்டிஸ்கில் குறிப்பிட்ட அளவே இடத்தை எடுத்து கொல் வதால் இதனால் கணினியின் வேகம் குறைவதில்லை.
  • வேகமாக பைல்களை ஸ்கேன் செய்ய கூடியது.

புதிய பதிப்பின் சிறப்பம்சங்கள்:

  • பைல் உபயோகித்து கொண்டிருந்தாலும் ஸ்கேன் செய்யும்.
  • ஸ்க்ரீன் சேவர்களையும் ஸ்கேன் செய்யும் வசதி.
  • கணினி பூட் ஆகும் போதே ஸ்கேன் செய்யும் வசதி NT/2000/XP உபோகிப்பவர்களுக்கு மட்டும்.
  • E-mail Scanner. மேலும் பல வசதிகள் இதில் அடங்கி யுள்ளது ஆகவே இந்த மென்பொருளை கணினியில் நிறுவி உங்கள் கணினியை பாதுகாத்து கொள்ளுங்கள்.

http://avast.soft32.com/

(இணையத்தில் இருந்ததை
இமையத்தில் வைக்கிறோம்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: