Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

`சாமுத்திரிகா லட்சண’ இலக்கணப்படி, உங்கள் மூக்கு

`சாமுத்திரிகா லட்சண’ இலக்கணப்படி, உடம்பின் ஒவ்வொரு அங்க அமைப்பும் அந்தந்த மனிதர்களின் நடத்தை, மனோபாவத்தைக் கூறக் கூடி யவை என்று நம்பப் படுவதுண்டு. அந்த வகை யில் ஒருவரின் `மூக்கை’ வைத்தே அவரின் குண நலன், ஆளுமை எப்படி இருக்கும் என்று கூறி விடலாம் என்கிறார், முக வியல் நிபுணர் டாக்டர் பிரேம் குப்தா. இவர் பட்டியலிடும் பல்வேறு வகை மூக்குகளும், அதற்குரியவர்களின் குணங் களும்…

பெயருக்கு ஏற்ப, பன்றியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது.

பன்றி’ மூக்குக்கும் பேராசைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த மூக்கு உடையவர்கள் பொருட் செல்வத்தைத் திரட்டுவதிலும், வசதியான வாழ் க்கை வாழ் வதிலும் ஆர்வமாக இருப்பார்கள். சுயநலமிக்க இவர்கள் சில நேர ங்களில் மற்றவர் களால் எளிதாக ஏமாற்றப்படு வார்கள். இந்த மூக்குக்காரர்கள் புத்திசாலிகளா வும் இருப்பார்கள். வேலையைச் செம்மையாகச் செய் வதில் ஆர்வம் காட்டுவார்கள்.

நுனியில் வளைந்து, கிளியினுடையதைப் போல காட்சிய ளிக்கும் மூக்கு இது.

கிளி’ மூக்கு உடையவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சொந்த முயற்சியால் வாழ்க்கையில் உயரும் திறன் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் சந்தர்ப்பவாதிகள், விரைவாகச் சிந்திப் பவர்கள். மற்றவர்களில் இருந்து வித்தியாசமாகச் சிந்திக்கும் இவர்கள் சில வேளைகளில் கலகக்காரர்களைப் போல பார்க் கப்படுவார்கள். ஆனால் மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவனமாக இருப்பார்கள்.

நெற்றியின் கீழ்ப்பகுதியில் இருந்து நுனி வரை வளைவின்றிச்

சீராக நீளும் கச்சிதமான மூக்கு இது.

நேரான மூக்கு கொண்டவர்கள் சம யோசிதமானவர்கள், புத்திசாலிகள். மடத் தனத்தை இவர்கள் விரும்பமா ட்டார்கள். வெளியே அப்பாவி போல காட்டிக்கொண்டாலும் உண்மையில் இவர்கள் அப்பாவிகள் அல்லர். இத்தகைய மூக்கு உள்ளோரைப் பிறர் புரிந்துகொள்ள கொஞ்ச காலம் பிடிக்கும். இவர்களுக்கு நல்லிணக்கம் பிடிக்கும்.

இந்த மூக்கு, உட்புறமாக வளைந்து, மேல்நோக்கிக் கூர்மையாக அமைந்திருக்கும். பனிச்சறுக்குப் பகுதியைப் போலத் தோன்றும்.

 

உம்மணாம் மூஞ்சிகள் இவர்கள். எது இவர்களுக்குப் பிடிக்கும், எது இவர்களுக்குப் பிடிக்காது என்று கணிப்பது கடினம். சில நேரங்களில் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்ட அடுத்த நொடியே மனதை மாற்றிக்கொள்வார்கள். இயற்கை மீது ஆர்வம் கொண்ட இவர்கள், பிறரின் நடத்தையைச் சரியாகக் கணிப்பார்கள்.

மூக்கு குட்டையாக இருக்கும். மூக்குத் துவாரங்களும் சிறியதாக இருக்கும்.

இனிய இயல்புள்ள விரும்பத்தக்க நபர்கள் இவர்கள். பரீட்சித்து, உறுதி செய்யப் பட்டவற்றையே செய்ய விரும்புவார்கள். `ரிஸ்க்’ எடுப்பது இவர்களுக்குப் பிடிக்காது. சில நேரங்களில் இவர்கள் அடுத்தவர்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டா ர்கள். அடுத்தவர்களின் கோணங்களையும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

இந்த மூக்கு பெரியதாகவும், சதைப்பற்றா னதாகவும், அடிப்பகுதி யில் அகன்றும் இருக்கும்.

இந்த மூக்கு ஆசாமி, ஆதிக்கம் செலுத்துபவர். மற்றவர்களின் உத்தர வுகளை ஏற்க மாட்டார். தமது சொந்த விருப்பப்படியே வாழ்வார். பெரிதாகச் சிந்திப்பார். சின்னச் சின்ன வேலைகள் செய்வது இவர் களுக்குப் பிடிக்காது.

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் மூக்கைப் போல நசுக்கப்பட்டது மாதிரி இருக்கும் மூக்கு இது.

இவர்கள் தைரியமானவர்கள், ஆக்ரோஷமானவர்கள், நம்பிக் கைக்கு உரியவர்கள். சராசரி மனிதர்களை விட இவர்களின் மூளை வேகமாக வேலை செய்யும். அதேநேரம், ஆக்ரோஷ இயல்பு காரணமாகவே இவர்கள் எளிதாகச் சச்சரவுகளில் சிக்கிக் கொள்வார்கள். தங்களின் லட்சியங்களை எட்டத் தடுமா றுவார்கள்.

வேகத்தடை போல நடுவில் ஒரு மேடு காணப்படும் மூக்கு இது.

இந்த வகை மூக்குக்குரியவர் உறுதியான ஆளுமை கொண்டவர். சூழ்நிலையை இணக்க மா க்குவதில் தேர்ந்தவர். ஆனால் மற்ற வர்களின் கருத்துகளை மதிக்க மாட்டார்கள். தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக இருப்பார்கள்.

நீண்ட, ஆனால் மேலாக வளைந்த மூக்கு இது. மூக்கு நுனி வெளிப் புறமாகவோ, உட்புறமாகவோ வளைந் திருக்காது. இந்தியா வின் மொகலாய அரசர்கள் பலருக்கு இவ்வகை மூக்கு அமைந்திருந்திருக்கிறது

இந்த மூக்கு உடையவர்கள் உறுதியான மனதிடமும், சுயேச்சை யாக முடிவெடுக்கும் திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். செல்வாக்கு மிக்க நபர்களாக இருக்கும் இவர்கள், பொறுமை சாலிகள். ஆசைத் தூண்டுதலுக்கு இவர்கள் மயங்கமாட்டார்கள். நளினம் இவர்களைக் கவரும். ஆனால் இயற்கையாகவே இவர் கள் பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் தொந்தரவு கொடுப் பதுண்டு. மற்றவர் களோடு தங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ச்சி அடைபவர்கள்.

நுனியில் கூர்மையாகவும், வளைந்ததாகவும் உள்ள மூக்கு இது. நுனி, உதட்டை நோக்கி வளைந்திருக்கும். இந்த மூக்கு ஏறக் குறைய அம்பு நுனியைப் போலி ருக்கும்.

இந்த மூக்குக்காரர்களுக்கு பொறுமை ரொம்பக் கம்மி. விவாதம் செய்யாமல் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உலகமே தனக்கு எதிராக சதி செய்கிறது என்ற சிந்தனைப் போக்கு உடைய வர்கள். இவர்கள் கூர்மையாகக் கவனிப்பவர்கள். ஆனால் தங்களின் சநதேக மனப்பான்மையால், சூழ்நிலையைப் பற்றித் தவறான முடிவுக்கு வருபவர்கள்.படபடப்பாக இருக்கும் இவர் கள், தூண்டுதலின் பேரில் செயல்படுவார்கள்.

நன்றி-தினத்தந்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: