Monday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரொமான்ஸ் அதிகரிக்க… – சில விதிமுறை

குறட்டை விடுவது, அதிகாலையில் எழுந்து லைட் போடுவது, புரண்டு படுப்பது இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் சில விதிமுறைகளை பின்பற்றுங்கள்.. படுக்கை அறை இன்பமய மாகும், ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கி ன்றனர் குடும்பநல நிபுணர்கள்.

வீட்டில் உள்ள அறைகளில் பெட்ரூம் முக்கியமானது. தூங்கி ஓய்வெடுப்பத ற்கு மட்டும் அல்ல.. மனதை ரிலாக்ஸ் செய்து மகிழ்வதற்கும் ஏற்ற அறை. குறிப்பாக தம்பதிகளுக்கு. ஆனால், அங்கும் சில சிரமங்கள், பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதை பெரிதுபடுத் தாமல் சமாளிக்க பழகி கொண்டால் ரொமன்ஸ் அதிகரிக்கும். இல்லை என்றால் வாழ்க்கை வெறுப் பாகிவிடும் என்கின்றனர் குடும்ப நல நிபுணர்கள்.
படுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதியர் இடையே வேறு பாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் குறட்டை விடும் நபராக இருக்கலாம். இது மற்றவரின் தூக்கத்துக்கு இடைஞ்சலாக, எரிச் சலாக இருக்கும். சில எளிய வழிகளை பின்பற்றி னால் பிரச் னையை சமாளிக்கலாம். நீங்கள் குறட்டை விடும் நபராக இருந் தால், ‘நாசல் ஸ்டிரிப்’ அணியலாம் அல்லது டாக்டரை சந்தித்து நிவாரணம் தேடலாம்.

பாதிக்கப்படும் நபராக இருந்தால் காதில் பஞ்சை வைத்து அடை த்து கொள்ளலாம் அல்லது மெல்லிய இசையை கேட்படி தூங்க லாம். அதுவும் இல்லையென்றால் கனமான போர்வை இழுத்துப் போர்த்தி படுக்கலாம். அல்பமான குறட்டைக்காக டைவர்ஸ் வரை போவது ரொம்ப ஓவர்.

சிலர் அடித்துப் போட்டாற்போல கொஞ்சம்கூட அசையாமல் தூங்குவார்கள். வேறு சிலர் புரண்டுகொண்டே இருப்பார்கள்.
உருளும் ஆசாமிகளின் பக்கத்தில் படுத்து தூங்குவது கஷ்டமான விஷயம்தான். இதுபோன்ற நபர்கள், பார்ட்னருக்கு தொந்தரவு கொடுக்காமல் தரையில் படுத்து புரள்வது சிறந்தது.
சிலர் அதிகாலை 4 மணிக்கே எழுந்திருப்பார்கள். உங்கள் இனிய வர் / இனியவள் மிட்நைட் 1 மணிவரை டிவி பார்த்துவிட் டோ, புத்தகம் படித்துவிட்டோ தூங்க செல்லும் நபராக இருக் கலாம். அப்படியிருந்தால் அதிகாலையில் எழுந்தி ருக்கும் நபர், முதல் வேலையாக வீடு முழுவதும் ட்யூப்லைட் போட்டு அமர்க் களம் பண்ணக்கூடாது. முடிந்த அளவு நைட் லேம்ப் வெளிச் சத்தி லேயே தன் வேலைகளை முடிக்க பழகிக் கொள்ள வேண்டும்.

இல்லற இன்பத்துக்குப்பின் சிலருக்கு உடனடியாக தூக்கம் சொக் கும். பார்ட்னர் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க பிரியப்படலாம். ‘குட்நைட்’ சொல்லி அவரை கடுப்பேற்றாமல், உங்கள் தூக்கத்தை அட்லீஸ்ட் 10 நிமிஷமாவது அவருக்காக தியாகம் செய்துவிட்டு பேசிக்கொண்டிருக்கலாம்.
பெரும்பாலும் இதுபோன்ற சின்னப் பிரச்னைகள்தான் விஸ்வ ரூப மெடுத்து பிரிவு வரை போகிறது.

பார்ட்னருடன் மனம் விட்டுப் பேசினால், மென்மையாக எடுத்துச் சொன்னால் சிறிய அளவாக இருக்கும்போதே பிரச்னைகளை அகற்றிவிடலாம். படுக்கைஅறை போல வாழ்க்கையும் இன்ப மாகும். ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் மனநல நிபுணர் கள்.

இணையத்தில் இருந்ததை
இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: