Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அம்மை நோய் தெய்வக் குற்றமா? (அ) ஒரு வைரசினால் ஏற்படுகின்ற நோயா?

அம்மை நோய் தெய்வக் குற்றமா? கொப்புளிப்பான் / அம்மை வருத்தம் (chicken pox) என்பது ஒரு வைரசினால் ஏற்படுகின்ற நோயாகும்.

நம்மவர்கள் நினைத்துக் கொள் வது போல இதற்கும் கடவுள் குற்றத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

இது நோயுள்ள ஒருவரில் இரு ந்து இன்னொருவருக்கு காற் றின் மூலமும் ,தொடுகை மூலமும் பரவலாம். இது தானாக சுகமாகிவிடக் கூடியது என்றாலும் இப்போது உள்ள அசிக்கு லோவிர் (Acyclovir) எனப் படும் மருந்து மூலம் இதன் தீவிரம் அதிகரிப் பதைத் தவிர்க்கலாம்.

ஆனால் இந்த மருந்து ஆரம்பத்திலேயே எடுக்க ப்பட வேண்டும். இந்த மருந் தினை பாவிப் பவர்கள் அதிகளவு நீர் அருந்த வே ண்டும். இந்த மருந்தை கட்டாயம் எல்லோரும் அருந்த வேண் டியது இல்லை இது தானாக சுகமாகக் கூடிய நோய் என்றாலும் கர்ப்பிணிகள் ,மிகவும் சிறிய குழந்தைகள், வயதான வர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந் தவர்களில் இது நிறையப் பாதிப்பு க்களை ஏற்படுத்தலாம்.

இப்படியானவர்கள் உடனடியாக வைத்தி யரை நாட வேண்டும். நோயாளிகள் பிரித் து வைக்கப்பட வேண்டுமா? கர்ப்பிணிகள் , மிகவும் சிறிய வயதுக் குழந்தைகள் , நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் இந்த நோயாளிகளிடம் இரு ந்து தள்ளி இருப்பது உகந் தது. எவ்வ ளவு காலத்திற்கு பிரித்து வைக்க வேண்டும்? கொப்பு ளங்கள் முற்றாக காய்ந்து உதிர்ந்து விழும்வரை பிரி த்து வைத்து வைத் தால் போதுமானது.

இது கிட்டத்தட்ட இரண்டு வாரத்திற்குத் தேவைப் படலாம். அதற்கப்புறம் நீங்கள் வேலை க்கோ பாடசாலைக்கோ செல்ல முடியும். நோய் ஏற்பட்டவர்கள் இளம்சூட்டு நீரினால் குளிக்க வேண்டும். குளித்த பின்பு நன்கு துடைத்து கொப்பு ளங்களை உலர்வாக வைத்திருக்க வேண் டும். இல்லாவிடியில் கொப்புள ங்களில் பாக்டீரியாக்கள் சேர்ந்து தொற்றுக்களை ஏற்படுத்தலாம்.

முகத்திலே கொப்புளங்கள் ஏற்படு பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு கண்களின் உள்ளே கொப்பு ளங்கள் ஏற்பட்டால் பாரிய பிரச்சினை ஏற்படலாம். நோய் ஏற்பட்டவர்கள் விரும் பிய எல்லாவிதமான சாப் பாடுகளையும் சாப்பிட முடி யும்.

மாமிசங்கள் சாப்பிடுவதால் நோயின் தீவிரம் அதிகரிப் பதில்லை. அதையும் தாண்டி சமய ரீதியாக மாமிசங்களைத் தவீர்ப்பவர்கள் போதியளவு சத்துள்ள மரக்கறிகளை உட்கொள்ள வேண்டும். நோயுள்ள காலத்தில் அதிகமான நீராகாரம் அருந்துங்கள்.

இணையத்தில் இருந்ததை
இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: