Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 41 இடங்கள் ஒதுக்கீடு

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இரவு ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் இடையே கையெ ழுத்தானது. அ.தி.மு.க., தே.மு.தி.க., கூட்டணியை உறுதி ப் படுத்தும் வகையில், கடந்த 24ம் தேதி அ.தி.மு.க., தலைமை அலு வலகத்தில் அக்கட்சியின் தொ குதி பங்கீடு குழுவினருடன், தே. மு .தி.க., தொகுதி பங்கீட்டு குழு வினர் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். “தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க.,வுடன் தே.மு. தி.க., கூட்டணி அமைத்துள்ளது’ என, தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் தெரி வித்தார்.

ஜெயலலிதாவின் 63வது பிறந்தநாளை ஒட்டி, அவருக்கு விஜய காந்த் சார்பில் பூங்கொத்தும் வழங்கப்பட்டது. தே.மு. தி.க.,விற்கு தொகுதி பங்கீடு எண்ணிக்கையை முடித்தவுடன் ம.தி.மு.க., – இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் கட்சிக்கு தொகுதி பங்கீடு செய்ய அ.தி.மு.க., தலைமை முடிவு செய்து ள்ளது. அ.தி.மு.க., – தே.மு.தி.க., பேச்சுவார்த்தை நடந்த பின், தேய்பிறை ஆரம்பி த்ததால், அக்கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடரவில்லை.

இந்நிலையில் இன்று இரவு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை தே,மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார் த்தையில் தே.மு.தி.க.,வுக்கு 41 இடங்கள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகள் எவையெவை என்பது குறித்து இரு கட்சி தலைவர்களும் விரைவில் பேசி முடிவு செய்ய உள்ளனர்.

( நாளேடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: