திரு மற்றும் திருமதி புரொஸ்ட் தம்பதியினர் வாழும் வீடு யோக்ஸயர் தெற்கில் ரொஸி ங்டனில் உள்ளது. இது அவர் களுக்குச் சொந்தமான வீட ல்ல.
நகரசபை நிர்வாகத்தால் வழ ங்கப் பட்டுள்ள வீடு.ஆனால் நகர சபையின் எந்த அனு மதியும் பெறாமல் இந்த வீட்டில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வெளியில் பார்க்கும்போது அது அப்படியே முன்னர் உள்ளது போல்தான் உள்ளது.
ஆனால் நகர சபை அதி காரிகளே அதிசயிக்க வை க்கும் வகையிலும், சுற்றி இருக்கும் வீடுகளில் வசிப் பவர்கள் பொறா மைப் படும் அளவுக்கும் பின்புற வீட்டுத் தோட்ட த்தில் பிரமாண்டமான நீச்சல் தடாகம் ஒன்று நிறுவப் பட்டுள்ளது.
இது அனுமதியின்றி கட்ட ப்பட்டுள்ளதால் தற்போது சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.
இந்த வீட்டில் வசிக்கும் இரண்டு பிள் ளைகளின் தாயான 31 வயதான லீஸா புரொஸ்ட் மற்றும் அவரின் கணவர் 33 வயதான டேவிட் ஆகியோர் 4000 பவு ண்களைச் செலவழித்து இந்த நீச்சல் தடாகத்தை நிறுவியுள்ளனர்.
இதன் நீளம் 15 அடி, அகலம் ஏழு அடி, ஆழம் ஐந்து அடிகள்.
மூன்று படுக்கை அறைகளைக் கொண் ட இந்த வீட்டின் பின் பகுதித் தோட்டம் முழுவதையும் இந்த தடாகம் ஆக்கி ரமித் துள்ளது.
நண்பர்களின் உதவியோடு இதை நிர்மாணித்துள்ளனர்.
இது ஒரு நிரந்தர நிர்மாணம் அல்ல என்றும், எனவே இது நகர சபை விதிமுறைகளையும் மீறவில்லையென்றும் லீஸா வாதி டுகின்றார்.
இவ்வளவு நியாயம் பேசும் இவர் வாராந்தம் 80 பவுண் நலன்புரி கொடுப்பனவு பெறுபவர்.
இணையத்தில் இருந்ததை
இமயத்தில் வைக்கிறோம்