Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிட்டி பாங்க்கில் அதிகம்: கிரெடிட் கார்டு மோசடி

சிட்டி பாங்கில், போலியான டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, ஒரு கோடியே 89 லட்சத்தை மோசடி செய்துள்ளனர். இம்மாதிரியான முறை கேடுகள் சிட்டி பாங்கில் தான் அதிகம் நடந்துள்ளது. இத்தகவலை லோக் சபாவில் கேள்வி நேரத்தின் போது, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். உறுப்பி னரின் கேள்வி ஒன்றுக்கு நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறிய தாவது: வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ள கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை, போலியாக தயாரித்து அதை  ஏ.டி.எம்.,களில் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய்க்களை பலர் மோசடி செய்து எடுத்துள்ளனர். இது போன்ற முறைகே டுகள், கடந்த 2007 08ம் ஆண்டு முதல் , கடந்தாண்டு டிசம்பர் 10ம் தேதி வரை சிட்டி பாங்க்கில் தான் நடந்துள்ளது. இந்த வகையில் அந்த வங்கியில் மட்டும் இது போன்ற புகார்கள் 92 உள்ளன. மோசடி செய்யப்பட்ட தொகை ஒரு கோடியே 82 லட்சம். சிட்டி பாங்கை தவிர, சிண்டிகேட் வங்கி, ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கி, பஞ்சாப் நேஷனல்

வங்கி, கனரா வங்கி ஆகியவற்றில் கடந்தாண்டில் மட்டும் தலா ஒரு புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.23 லட்சம். பாங்க் ஆப் இந்தியாவில் கடந்த 2007-08ம் ஆண் டில் இது போன்ற ஒரு புகார் தான் வந்துள்ளது. ஆனால், முறை கேட்டில் சம்மந்தப்பட்ட தொகை அதிகமாக உள்ளது. இந்த ஒரு புகார் மட்டும் ஒரு கோடியே 92 லட்சம். இந்த முறைகேட்டால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி அந்தந்த வங்கிகள் தான் முடிவு செய்ய வேண்டும். இது போன்ற முறைகேடுகளை தடுக்கவும் பாதுகாப்பு நடவடிக்கை களை மேற்கொள்ளவும், ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி பல ஆலோசனைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக, கார்டில் உள்ள, மேக்னடிக் ஸ்டிரிப்’ பை மாற்றுதல் உட்பட பல சிபாரிசுகள் அடங் கும். இது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும். வாடிக்கையா ளர்களின் அடையாளங்களை அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து வாடிக்கையாளர்களிடம் இருந்து ,கே.ஒய்.சி., விண் ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்த பிறகு, டெபிட் கார்டு அல் லது கிரெடிட் கார்டுகளை வழங்கும்படி ரிசர்வ் வங்கி கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. மேற்கண்ட முறை கேட்டில் சிக்கி யவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இது தவிர முறைகேடுகளை தடு க்க, தவறுகள் நடப்பதற்கு முன்பே கண்டறியும் வகையில் கட்டுப் பாடு நடவடிக் கைகளை துவக்க ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் சுற் றறிக்கை அனுப்பியுள்ளது. இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: