Saturday, July 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண் ஒருவர் பெயரில் 117 மொபைல் கனெக்ஷன்

புறநகரை சேர்ந்தபெண் ஒருவர் பெயரில் 117 மொபைல் கனெக்ஷன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மொபைல் போன்கள் பெரும்பாலனா வை போலியான அட்ரஸ்களை தருவ தன் மூலம் தீவிரவாத குழுக்கள் பகிர ங்கமாக செயல்படுகின்றன என்ற தகவ லால் டிராய் அமைப்பு செல் போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் தங்க ளின் வாடிக்கை யாளர் களின் விலாசங் களை சரிபார்க்கும்படி அவ்வ ப்போது உத்தரவு பிறப் பிப்பது வழக் கம்.

இதனை பெரும்பாலான நிறுவனங்கள் முறையாக கடைப்பிடிப்ப தில்லை என புகார் வந்ததையடுத்து டெலிபோன் நிறுவனம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

அப்போது புதுடில்லி புறநகர் பகுதியை சேர்ந்த டர்கமான்கேட் என்ற பகுதியை சேர்ந்த 34வயது கொண்டகீதா (பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்ற பெண் ஒருவர் பெயரில் 117 மொபைல் கனெக் சன் பெற்றிருப்பதை கண்டறிந்தது.

இதனையடுத்து தீவிரமாக விசாரிக்கத்துவங்கிய போது அப்பெ ண்ணின் சகோதரர் மற்றும் கணவன், நண்பர்கள் என அப்பெண் ணின் பெயரை பயன்படுத்தி கனெக்ஷன் பெற்றிருப்பது கண்டறிய ப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அப்பெண்ணின் பெயரில் கனெக்ஷன் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் விசே ஷம் என்னவெனில் 117 மொபைல் போன் கனெக்ஷனில் ஒன்று கூட அவரிடம் கிடையாது.

எந்த ஒரு மொபைல் போனும் அவரிடம் கிடையாது என்பது தான் கூடுதல் தகவல். படிப்பறிவில்லாத அவரின் அறியாமையை பய ன்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அப்பெண்ணின் மீது போலீசார் ஐபிசி வழக்கு எண்(420) மோசடி செய்தல்,அடுத்தவரை ஏமாற்றுதல்(468), போ லி விலாசங்களை தந்து மோசடி செய்தல்(471), கூட்டுச் சதி (120 பி) போன்ற வழக்குகளின் கீழ் பதிவு செய்துள்ளனர்.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply