Monday, April 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மத்திய மந்திரி சபையிலிருந்து விலகி, காங்கிரசுக்கு “டாட்டா” காட்டியது தி.மு.க,

தி.மு.க.- காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு, எப்படி முடிவடை யும் என்பதில் கேள்விக்குறி எழுந்தது.

இந்நிலையில் தி.முக உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறி வாலயத்தில் நடந்தது.
தி.மு.க. தலைவர் கருணா நிதி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் தேர்தல் அறிக் கை தயாரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதி கேட்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது.
இந்நிலையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக அறிவித்தது. மேலும் பிரச்சினை அடிப்படையில் வெளியில் இருந்து மன்மோகன் சிங் ஆட்சிக்கு ஆதரவு எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
தொகுதி பங்கீட்டு பிரச்சினை காரணமாக தி.மு.க விலகுகிறது என விளக்கம் கூறியது.. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்க விரும்பவில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: