ஒருவரை எந்த வகையான நோய்கள் தாக்கும் என்பதையும், அவருக்கு மற்றவர்கள் மேல் உள்ள நாட்டத்தையும் விரல் அமைப்பை வைத்தே தெரிந்து கொள்ள லாம் என்கிறது புதிய ஆய்வு ஒன்று.
விரல் அமைப்புகளுக்கும் நோய்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். 2000 பேரை தேர்வு செய்து அவர்களது விரல்கள் பரிசோதிக்கப்பட்டன.
இதே போல ஸ்வான்சீ பல்கலைக்கழகம் சார்பிலும் 200 பேரிடம் தனியாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகளில் தெரிய வந்த தகவல்கள் பற்றி விஞ்ஞானிகள் கூறுவதாவது: ஒருவர் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே உடலமைப்பு உறுதிப்படுகிறது. விரல்களும் இதில் அடங்கும்.
ஆள்காட்டி விரல், மோதிர விரல் களின் அமைப்பை வைத்தே பல விஷயங்களை கணி த்து விடலாம். இதய நோய், புற்றுநோய், சளித்தொ ல்லை மற்றும் மூட்டு உபா தைகள் ஆகியவ ற்றுக்கான பாதிப்பு இருந்தால் விரல் அமைப்பு சொல்லி விடும்.
பாலியல் ஈடுபாட்டையும் விரல் அமைப்பு மூலம் தெரிந்து கொள் ளலாம். பாலினத்தை நிர்ண யிக்கும் ஈஸ்ட்ரோஜன், டெஸ் டோ ஸ்டிரோன் போன் ற ஹார்மோன்களின் அள வையும் இதன்மூலம் அறிந்து கொள்ள முடியும்.
உடலில் ஆண்மையின் அடையா ளங்களை நிர்ணயி க்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவு மிகுந்தால் மோதிர விரல் நீளமாக இருக்கும். ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் ஈஸ்ட்ரோஜென் அதிகம் இருக்கும்.
ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்தால் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் எனப்படும் மூட்டு பாதிப்புகள் வரும் சாத்தியக்கூறு அதிகம். விரல் பற்றி தெரிந்து கொள்வதன் மூலமாக நமக்கு ஏற்படக்கூடிய உடல் உபாதைகள், நோய்கள் பற்றியும் முன்கூட்டியே தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்பான ஆய்வு தீவிரமாக நடந்து வருகிறது.
இணையத்தில் இருந்ததை
இமயத்தில் வைக்கிறோம்
படங்கள் தொகுப்பு-விதை2விருட்சம்