Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ராக்கெட், பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்த்தபடி மேலே எப்படி செல்கிறது?

ராக்கெட் ஒரு செயற்கைக் கோளையோ அல்லது சந்திரனையோ எப்படி பூமியின் ஈர்ப்பு விசை யை எதிர்த்தபடி மேலே தூக்கிக் கொண்டு செல்கி றது?. ஒரு சுற்றுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் விண்கலம் அல்லது செயற் கை கோளின் இயல்பு வேகத் தை எப்படி செயற் கையாக மாற்றுகிறார்கள்?.

இவை இரண்டுமே ஜெட் விமான ங்கள் எப்படி இயங்குகின்றனவோ அதே முறையில்தான் இயங்குகி ன்றன.

ஒரு நுண்துளை வழியாக அதிக அழுத்தமுள்ள பாய்மம் ஒன்று பீய்ச்சப்படும் பொது ,அதற்கு எதிர் வினை ஒன்று இருக்கும். நாம் வீட்டி லேயே செய்து பார்க்கக்கூடிய ஒன்று ஒரு பலூனை எடுத்து அதில் காற்றை நிரப்பி ,வாயைக் கட்டாமல் சட்டென்று விட்டு விடு வது. பலூனின் வாய் வழியாக கா ற்று வெளியேறும் போது பலூன் முன்னோக்கி (சற்றே கன்னா பின் னாவென்று சுருண்டபடி) பாயும். இது நியூட்டனின் மூன்றாவது விதியிலிருந்து வருவது. ஒவ் வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு.

படகு ஓட்டும்போது ,துடுப்பால் தண்ணீரை வலிந்து பின்னோக்கித் தள்ளுகிறார்கள்.படகு முன் னோக்கிச் செல்கிறது. அதேபோல படகில் மண்ணெண்ணெய் அல்லது டீசலால் இயங்கும் சிறு புரொபெல்லரை (உந்துகருவி) பொருத்துகிறார்கள். புரொ பெல்லர் சுழன்று தண்ணீ ரைப் பின்னோக்கி தள்ளு கிறது. இதனால் விசைப்ப டகு முன்னோக்கி முன்னே றுகிறது.

இதேபோலத்தான் ஜெட் விமானத்திலும் நடக்கிறது. ஜெட் எஞ்சினில் நிறைய எரி பொருள் இருக்கும். எஞ்சினின் முன்புறத்தில் ஒரு சுழலி இரு க்கும். சுழலி சுற்றும்போது வெளியிலிருந்து காற்றை உள்ளே இழுக்கும். அந்தக் காற்று அழுத்தப்படும். அதில் எரிபொருள் கலந்து பற்றவைக்கப்படும். எரிபொருள் எரிந்து, எக்கச் சக்கமாக கரியமில வாயு வை உருவாக்கும். இந்தக் கரியமில வாயு வெளியேறு வதற்கு பல நுண் துளைகள் ஜெட் எஞ்சினின் பின்பக்கம் இருக்கும். இந்த நுண் துளைகள் வழியே வெகு வேகமாக வெளி யேறும் வாயுக்கள், ஜெட் எஞ்சினை கடுமையான வேகத்தில் முன் நோக் கிச் செலுத்தும். இதனால் ஜெட் எஞ்சினும் அதனோடு இணைந்த விமானமும் முன் னோக்கிப் பாயும். இந்தப் பாய்ச் சலை வான் நோக்கிய பாய்ச்சலாக மாற்றி ஜெட் விமானம் செலுத்தப்படும்.

சரி, ராக்கெட் வடிவமைப்பில் என்ன வித்தியாசம்?. ஜெட் விமானங்கள் பதற்கு உயரம் காற்று மண்டலதுக் குல்லா கவே தான் உள்ளது. சுற்றி லும் உள்ள காற்றில் இருந்து கிடை க்கும் ஒக்சி ஜன் இருந்தால்தான் எரிபொருள் எரியும். ஆனால், ராக்கேட்டோ, காற்று மண்டலத்தை விட்டு அப்பால் செல்கிறது. அந்த உயரத்தில் சுற்றிலும் ஒக்சிஜன் என் பது மருந்துக்கும் கிடையாது. அப் படிஎன்றால் எரிபொருள் எரிய என்ன செய்வது?.

கூடவே எரிபொருள் எரிக்கத் தேவை யான ஒக்சிஜனையும் எடுத்துச் செல் லவேண்டும். இது மேற்கொண்டு சுமை யை அதிகரிக் கும். ஆனால் வேறு வழியில்லை. பி. எஸ். எல்.வி மட்டுமல்ல, சந்திராயனில் உள்ள எஞ்சினும் இப்படித் தான். அதில் எரிபொ ருளும் உண்டு. கூடவே ஒக்சிஜனும் உண்டு.

இந்த எரிபொருள் எப்படி இருக்கும்?.இது திட வடிவில், தூளாக இருக்கலாம். அல்லது திரவ மாக இருக்கலாம். (பெட்ரோல் போல) .அல்லது வாயு எரிபொருள் ஒன்றை மிக அழுத்தத்திலும் மிகக் குறைவான வெப்பத்திலும் (அதாவது கடு ங்குளிரிலும்) திரவமாக்கி சேர்த்து வைக்கலாம். நீர்மமாக்கப் பட்ட வாயு எரிபோருல்தான் மிகமிக அதிகச் செயல்திறன் கொண் டது. ஹைட்ரஜனை கடுங் குளிரில், கடும் அழுத்தத்தில் திரவ மாக்கி, அத்துடன் ஒக்சி ஜனையும் அதேபோல திரவ மாக்கி எரி பொருளாகவும் ஒக்சி ஜநேற்றியாகவும் எடுத்து செல் வது தான் ஒரு ராக்கெட்டுக்கு மிக அதிக சக்தியைத் தரும். அந்த எஞ்சி னுக்கு கையோ ஜீனிக் எஞ்சின் என்று பெயர். சந்திராயனில் இருப்பது கிரை யோஜீனிக் எஞ்சின் கிடையாது. திரவ எரிபொருள் ஒன்றையும் ஒக்சிஜன் வழங்கி திரவம் ஒன்றையும் எடுத்து செல்கிறது.

இணையத்தில் இருந்ததை
இமயத்தில் வைக்கிறோம்

ப‌டங்கள் தொகுப்பு-விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: