காங்கிரஸ் உறவை தி.மு.க. துண்டித்துள்ளதைத் தொடர்ந்து
தமிழக அரசியலில் அந்த கட்சிகளின் அடுத்த கட்ட நடவடி க்கை எப்படி இருக் கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வை பொறுத்தவரை, அதன் கூட் டணியில் பா.ம.க., விடுத லைச்சிறுத்தைகள், முஸ் லிம் லீக், கொங்கு நாடு முன் னேற்றக் கழகம், மூவே ந்தர் முன்னேற்றக்கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு சமூக நல அமை ப்புகள், சங்கங்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

காங்கிரசைப் பொறுத்த வரை தற்போது எந்த ஒரு கட்சியும் அதனுடன் இல்லை. எனவே அ.திமு.க. பக்கம் காங்கிரஸ் அணி மாறக்கூடும் என்று தகவல்கள் வெளியானது. காங்கிரசாரில் ஒரு சாரார் அ.தி.மு.க.வுடன் கை கோர்க்கலாம் என்று கூறினார்கள். ஆனால் அ.தி.மு.க.- காங்கிரஸ் இரண்டும் உடனடியாக பரஸ்பரம் நட்பு பாராட்டும் வகையில் சூழ்நிலை இல்லை.
காங்கிரசை சேர்த்துக் கொள்ள அ.திமு.க. தலைமை ஆர்வம் காட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் தனித்து நின்றால் ஓட்டுகள் பிரிந்து தங்களுக்கு சாதகமான வாய்ப்பு ஏற்படும் என்று அ.தி.மு.க. கருதுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. இருபக்கமும் சேராமல் காங்கிரஸ் 3-வது அணி அமைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் 3-வது அணியை உருவாக்க காங்கி ரசுக்கு கை கொடுக்க வலுவான வேறு எந்த கட்சிகளும் இல்லை.
எல்லா கட்சிகளும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அணியில் போய் சேர்ந்து விட்டன. எனவே தமிழக காங்கிரசின் நிலை தற்போ தைக்கு குழப்பமான நிலையில் தான் உள்ளது. சில மாதங்களுக்கு முன்புவரை தே.மு.தி.க.வுடன் காங்கிரஸ் சேரும் என்று சொல் லிக் கொண்டிருந்தார்கள். தற்போது அதுவும் இல்லை என்றாகி விட் டது. தனித்து விடப்பட்டுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மேலிடத்தின் தொடர் மவுனத்தால், அடுத்த கட்ட நடவடிக்கை பற் றிய தெரிவு இல்லாமல் உள்ளனர்.
இந்த நிலையில் கடைசியில் காங்கிரஸ் கட்சி தமிழக சட்டசபை தேர்தலை தனித்து நின்றே சந்திக்கும் என்று தெரிய வந்துள்ளது. தொகுதி பங்கீட்டை காரணமாக கூறினாலும் ஸ்பெக்ட்ரம் விவ காரத்தில் இருந்து கட்சியை காப்பாற்றி கொள்வே காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வந்து ள்ளதாக தெரிகிறது.
தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற இயலாது என்று தமிழக காங்கிரசார் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் தனித்துப் போட்டி யிட்டால்தான் 234 தொகுதிகளிலும் கட்சியின் உள் கட்டமை ப்பை உறுதிப்படுத்த முடியும் என்று காங்கிரஸ் மேலிட தலை வர்கள் நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 12 முதல் 15 சதவீதம் ஓட்டு இருப்பதாக சமீபத்தில் எடுத்த சர்வே மூலம் காங்கிரஸ் மேலிடம் உறுதி படுத்தி கொண்டுள்ளது. எனவே 234 தொகுதிகளிலும் வெற்றி- தோல்வியை நிர்ணயி க்கும் சக்தியாக காங்கிரஸ் இருக்கும்.
அதை பரீட்சித்துப் பார்த்து விடலாம் என்று ராகுல்காந்தி கூறி வருகிறாராம். எனவே தமிழக தேர்தல் களத்தை தன்னந்தனியாக நின்று எதிர் கொள்ள காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீர்மானித் துள்ளனர். ஆனால் தி.மு.க.விடம் பதவி சுகம் அனுபவித்த காங் கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தலைவிதி என்ன ஆகுமோ என்ற பீதியில் உள்ளனர்.
(நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )