Monday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க…

பெண்ணின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை திருமணம். பெண்களுக்கு 18,19 வயதிலேயே திரு மண ஆசை தலை தூக்கலாம். ஆனா லும் 20 முதல் 24 வயதுவரையிலான கால கட்டமே திருமணத்திற்குச் சரி யான பருவம். திருமணம் செய்து கொள் ளும் ஆணுக்கும், பெண்ணுக்குமிடை யே இத்தனை வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது.

ஆணுக்கும், பெண்ணுக்கும் மனதள விலும் தாம்பத்திய உறவிலும் மகிழ் ச்சி ஏற்படுத்தும் நிலைமையே சரியான திருமணம். ஆனாலும் பொதுவாக இருவ ருக்கும் ஐந்து முதல் எட்டு வயது வரை வித்தியாசம் இருந்தால் நல்லது.
திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்கள் கீழ்க்கண்ட விஷய ங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
சொந்தத்தில் திருமணம் செய்வ தைத்தவிர்க்க வேண்டும். உறவு விட்டுப் போகக் கூடாதே என் றோ, சொத்துக்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ சொந் தத்தில் திருமணம் செய்து வை ப்பது நம் நாட்டில் சகஜமான விஷயம். இரத்த உறவினர்களைத் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல என அறிவியல் ரீதி யாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் தாய்க்கோ, தந்தைக்கோ உள்ள வேண்டப்படாத மரபணு அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். சில சமயம் அவர்களுக்குப் பிறக் கும் குழந்தை மூளை வளர்ச்சியின்றி பிறக்கவோ, குறைப் பிரசவம் நிகழவோ கூடும். பெற்றோருக்கு இதை எடுத்துச் சொல் லிப் புரிய வைக்க வேண்டியது சம்பந்தப் பட்ட பெண்ணின் கடமை.
எக்காரணம் கொண்டும் திருமண த்திற்கு முன்பாக செக்ஸ் உறவுகளில் ஈடுபடக் கூடாது. செக் ஸைப் பற்றித் தெரிந்து கொள் ள இந்தக் காலத்துப் பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம். அதைத் தவிர்த்து அனுபவரீதியாக தெரிந்து கொள்ள நினைக்கவே கூடாது. அதனால் கருத்த ரிக்கும் நிலை ஏற்பட்டாலோ, அதை கலைத்து விட்டாலோ அவை மூலம் ஏற்படும் மன அதிர்ச்சி, அவ ளது வாழ் க்கை முழுவதும் தொடரும்.
எப்படி எவ்வளவு ஜாக்கிரதையாகப் பழகினாலும், இந்த விஷயத்திற்குத் தன்னை விட்டுக் கொடுக்கும் பெண், பிறகு அந்த வாலிபனையே மணந்து கொண்டாலும், அவ னிடம் சுய மதிப் பை இழந்து விடுவாள். காரணம் திரும ணத் துக்கு முன்பே இவள் நம் மோடு படுக்கையை பகிர்ந்து கொண்டவள் தானே என்ற எண்ணம் கணவ னுக்கு ஏற்பட் டிருக்கும்.

திருமண வாழ்க்கை என்பது பெண்களைப் பொறுத்தவரை முற்றிலும் மாறுபட்ட புதிய தோர் உலகம். எனவே இந்த வாழ்க் கையின் மூலம், தான் இழக்கப் போகிறவற்றையும் பெறப்போகி றவற்றையும் உணர்ந்து
உடலளவிலும்,உள்ளத்தளவிலும் பக்குவமடைய வேண்டும் அவள்.
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்
ப‌டங்கள் தொகுப்பு-விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: