Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தி.மு.க. மந்திரிகள் ராஜினாமா நாளை வரை ஒத்திவைப்பு

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. -காங்கிரஸ் கட்சிகளிடையே பல்வேறு பிரச்சினைகளால் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. காங்கிரஸ் தலைமை விதி த்த நிபந்தனைகள் தி.மு.க. வினரை கடும் அதிருப்தி அடையச் செய்தது.
காங் கிரஸ் தலைவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறு த்த தி.மு.க. தலைவர்கள், மத்திய மந்திரி சபையில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழுவில் முடிவு எடுத்து அறிவித்தனர். தி.மு.க. சார்பில் மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள 6 மந்திரிகளும் திங்கட்கிழமை பதவிகளை ராஜினாமா செய்து கடிதம் கொடுப்பார்கள் என்றும் அறிவிக்கப் பட்டது. தி.மு.க.வின் அதிரடி முடிவால் காங்கிரஸ் தலைவர் களிடம் மனமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியிடம் முதலில் சலனம் கூட ஏற்பட வில்லை.

காங்கிரஸ் தலைவர்கள் யாரும் தி.மு.க. விடம் தொடர்பு கொண்டு பேசாமல் இருந்தனர். இதனால் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி விரிசல் தொடர்பாக பரபரப்பான சூழ்நிலை நீடித்தது.   இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர் ஜியும், தமிழ்நாடு காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்தும் நேற்றிரவு சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறி த்து விவாதித்தனர். சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது. அதன் பிறகு முதல்- அமைச்சர் கருணாநிதியுடன் நேற் றிரவு 10.30 மணிக்கு போனில் தொடர்பு கொள்ள பிரணாப் முகர்ஜி முயன்றார். அதற்கு பலன் கிடைக்கவில்லை.

இதையடுத்து பிரணாப் முகர்ஜி போனில் டி.ஆர். பாலுவுடன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ஐக்கிய முற்போ க்கு கூட்டணியில் இருந்தும், மத்திய மந்திரி சபையில் இருந்தும் தி.மு.க. விலகும் முடிவை மறுபரிசீலனை செய்ய கருணா நிதியிடம் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொண்டார். காங்கிரசுக்கு சற்று கால அவகாசம் தர வேண்டும் என்றும் டி.ஆர். பாலுவிடம் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதில் அளித்த டி.ஆர்.பாலு, மந்திரி சபையில் இருந்து தி.மு.க. வில குவது என்ற முடிவு உயர்நிலை செயல் திட்டக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

தற்போதைய சூழ்நிலைகள் எல்லாவற்றையும் பரிசீலித்து, நீண்ட யோசனைக்குப்பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது. உங்கள் கருத்தை எங்கள் கட்சித்தலைவரிடம் தெரிவிக்கிறேன் என்றார். இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டி.ஆர்.பாலு, காங்கிரஸ் மீண்டும் பேசி வருகிறது. இது தொடர்பாக எங்கள் தலைவர் இறுதி முடிவு எடுப்பார் என்றார். இந்த நிலையில் இன்று (திங்கள்) காலை 6.40 மணிக்கு இந்தியன் ஏர் லைன்ஸ் விமானம் மூலம் தி.மு.க. மந்திரிகள் மு.க. அழகிரி, ஜெகத்ரட்சகன், நெப்போலியன், தயாநிதி மாறன் ஆகிய 4 பேரும் டெல்லி சென்றனர். மற்றொரு மந்திரி காந்தி செல்வன் கோவை யில் இருந்து டெல்லி சென்றார். அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் டெல்லியில் உள்ளார்.

அவர்கள் 6 பேரும் 11 மணி அளவில் பாராளுமன்றத்துக்கு சென்று அங்குள்ள அலுவலகத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந் தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுப்பார்கள் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் 11 மணிக்கு தி.மு.க. மந்திரிகளை சந்திக்க பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கவில்லை.   தாமஸ் விவகாரம் பற்றி பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருந்ததால் பிரதமர் தி.மு.க. மந்திரிகளை சந்திக்கவில்லை. இதனால் தி.மு.க. மந்திரிகள் 6 பேரும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திட்டமிட்டப்படி அவர்களால் 11 மணிக்கு ராஜினாமா கடிதத்தை கொடுக்க இயலவில்லை.   இந்த நிலையில் தி.மு.க. மந்திரிகள் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், தயாநிதி மாறன் ஆகியோர் பாராளு மன்ற அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்தினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது வெளியிடப்படவில்லை.

இந்த சந்திப்பின் போது சோனியாவின் ஆலோசகர் அகமது படேல் மற்றும் குலாம்நபி ஆசாத் உடன் இருந்தனர். இதற் கிடையே தி.மு.க. மந்திரிகள் அனைவரும் டெல்லியில் உள்ள மு.க.அழகிரி வீட்டில் ஒன்று கூடினார்கள். அங்கு அவர்கள் பிர ணாப் முகர்ஜியின் கடைசி கட்ட சமரச முயற்சி பற்றி விவாதி த்தனர்.

காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள கோரிக்கை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அதன்பின் மாலை 6.30 மணிக்கு ராஜினாமா கடிதம் கொடுப்பதாக இருந்தது. இந்நிலையில் காங் கிரஸ் ஒருநாள் அவகாசம் கேட்டுக் கொண்டதாகவும், ஆகவே மத்திய மந்திரிகள் ராஜினாமா ஒத்தி வைத்துள்ளதாவும் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத் தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
( நாளேடு ஒ ன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: