“நாடோடிகள்” புகழ் அனன்யா இந்தியில் மாதவனுடன் நடிக்கப்போவதாக சில தினங்க ளுக்கு முன்னர் செய்திகள் வந்தது. இந்நிலை யில் அதனை மறுத்துள்ளார் நடிகர் மாதவன். அத்துடன் அனன்யா யாரென்றே தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மாதவன். தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதுதவிர இந்தியிலும் இவர் பிரபலம். தற்போது இந்தியில் இவர் நடித்துள்ள தானு வெட்ஸ் மானு என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் இந்த படம் ரூ.18.56 கோடி வசூலாகியுள்ளது. அதனால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் மாதவன். இந்நிலையில் நடிகை அனன்யா, மாதவனுடன் இந்தியில் ஒரு படம் நடிக்கப் போவ தாக செய்திகள் வந்தது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சில தினங் களுக்கு முன்னர் நடிகை அனன் யாவுடன் நான் நடிப்பதாக செய்திகள் வந்தது. அது உண்மை யல்ல, சொல்லப்போனால் நடிகை அனன்யா யாரெ ன்றே எனக்கு தெரி யாது. தற்போது தமிழில், லிங்கு சாமியின் “வேட்டை” படத்தில் மட்டு மே நடிக்க ஒப்புக் கொண்டு ள்ளேன். இந்தியில் இரண்டு படங்கள் நடிக்கவுள்ளேன். ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்ப டவில்லை. மற்றபடி அனன்யா கூட நடிப்பதெல்லாம் வெறும் வதந்தி தான் என்றார்.
( நாளேடு ஒ ன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )