Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அறிவியலைக் கற்றுக்கொடுக்கும் டிவிடிக்கள்

சிறுவர்களுக்கும், பள்ளி மாணவர் களுக்கும், அவர்களின் அறிவுத் தேடலுக்குத் உதவிடும் வகையில், பெப்பில்ஸ் நிறுவனம் பல டிவிடிக்களை வெளியிட்டு வருகிறது. அண் மையில் அறிவியல் கூற்று க்கள் பலவற்றை, சிறுவர்கள் அவற்றைக் கற்றுக் கொள் ளும் வயதுவாரியாகப் பிரி த்து, மூன்று டிவிடிக்களை Science Experiments என்ற தலைப்பில் வெளியிட்டு ள்ளது. இவை 5 வயது முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கான மூன்று டிவிடிகளாகும்.
அடிப்படை அறிவியல் கோட்பாடு களை, எந்த பரிசோதனைக் கூடத்திற்கும் செல்லாமல் அறிந்து கொள்ளும் வகையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள், தங்களைச் சுற்றி உள்ள பொ ருட்களைப் பயன்படுத்தித் தாங்களாகவே இந்த பரிசோதனை களை மேற்கொண்டு, கற்றுக் கொள்ளும் வகையில் காட்டப்பட் டுள்ளன.

எடுத்துக்காட்டாக, மின்சாரம், பேப்பர் பந்து, வாட்டர் பாட்டிலில் உள்ள நீரின் அழுத்தம், காற்றின் எடை, புவி ஈர்ப்பு சக்தியும் காந்த சக்தியும், காற்றில் எரியும் மெழுகுவத்தி, டிடர்ஜண்ட், காந்தம் பயன்படுத்தி விளையாட்டுக்கள் ஆகியவை ஐந்து மற்றும் ஆறு வயதுள்ள சிறுவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வேடிக் கையாக விளக்கப் பட்டுள்ளன. 7 மற்றும் 8 வயது சிறுவர் களுக்கான டிவிடியில், மிதக்கும் ஊசி, பொருட்களைப் பெரிதா க்கிக் காட்டும் லென்ஸ், இதயத் துடிப்பு போன்றவை விளக்கப் பட்டுள்ளன. அடுத்த நிலையில் 11 வயது வரை வளர்ந்த சிறுவர் களுக்கு, மரம் நடுதல், மின்சாரம் செலுத்துதல், தண்ணீர் மற்றும் காற்று செயல்பாடு, பேப்பர் குடுவையில் தண்ணீர் கொதித்தல், எரிமலை ஏற்படுதல், இதயம் விரிவடைதல் போன்றவை விளக்க ப்படுகின்றன.

அனுபவமுள்ள ஆசிரியர்கள், கல்வி ஆலோசகர்கள் மற்றும் அறிவியல் பாட வல்லுநர்கள் குழு இவற்றைத் தயாரித்து வழங்கி யுள்ளது. ஒவ்வொரு டிவிடியும் ரூ.199 விலையிடப்பட்டுள்ளது. தேவைப் படுவோர் மேலதிகத் தகவல்களுக்கு சென்னை தொலை பேசி 28546297 என்ற எண்ணைத் தொடர்பு கொள் ளலாம். அல்லது இந்த நிறுவனத்தின் இணைய தளத்தினை www.pebbles.in என்ற முகவரியில் அணுகலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: