Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆடைகள் ஏற்றுமதி ரூ.5,200 கோடியாக உயர்வு:அமெரிக்காவில் தேவைப்பாடு அதிகரிப்பு

சென்ற ஜனவரி மாதத்தில், நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி 114 கோடி டாலராக (5,244 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண் டின் இதே மாதத் தில், மேற்கொ ள்ளப்பட்ட ஏற்று மதியை விட, 19.5 சதவீதம் (95.70 கோடி டாலர்- 4,402 கோடி ரூபாய்) அதிகமாகும். அமெரிக் காவில், இந்திய ஆடைகளுக்கான தேவை ப்பாடு அதிகரித்து வருகிறது.

மேலும், ஐரோப்பிய சந்தைகளும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால், ஒட்டு மொத்த அளவில் ஆடைகள் ஏற்றுமதி வளர் ச்சி கண்டு வருவதாக, ஆடைகள் மேம் பாட்டு ஆணையத்தின் தலைவர் பிரமல் உதானி தெரிவித்தார். இந்தியாவின் ஒட்டு மொத்த ஆடைகள் ஏற்று மதியில், அமெரிக் காவின் பங்களிப்பு 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

சென்ற ஜனவரி மாதத்தில், ஆடைகள் ஏற்றுமதி அதிகரித் துள்ளது என் றாலும், நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாத காலத்தில், இதன் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட 0.33 சதவீதம் சரிவடைந்து 871 கோடி டாலராக (40 ஆயிரம் கோடி ரூபாய்) குறைந்து ள்ளது. நடப்பு நிதியாண்டின் தொடக் கத்தில், ஏற்றுமதி மந்தமாக இருந் தாலும், ஆகஸ்ட் மாதம் முதல் ஆடைகள் ஏற்றுமதி நல்ல அள வில் வளர்ச்சி காணத் தொடங்கி யுள்ளது.

மத்தியஅரசு, பருத்தி மற்றும் பருத்தி நூலிழைகள் ஏற்றுமதிக்கு கட்டுபாடுகள் விதித்ததால், உள்நாட்டில், மூலப் பொருள்களின் விலை குறைந்திருந்தது. இதனால், உள்நாட்டில் ஆடைகள் தயாரி ப்பில் ஈடு பட்டு வரும் நிறுவனங்கள், வெளிநாடுகளின் போட்டிகளை எதிர் கொண்டு, அதிகளவில் ஏற்றுமதியை மேற் கொள்ள முடிகிறது என, உதானி மேலும் தெரிவித்தார்.

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: