Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காங்கிரசுக்கு 63 தொகுதிகள்: பா.ம.க. மற்றும் முஸ்லிம் லீக் தலா

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற உள்ள நிலை யில் தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. (31), விடுதலை சிறுத் தைகள் (10), கொங்குநாடு முன்னேற்றக்கழகம் (7), முஸ்லிம் லீக் (3), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளுக்கு 52 இடங்கள் கொடுக்கப்பட்டுவிட்டதால் மீதம் உள்ள 182 தொகுதிகளில் 60 இடங் களை மட்டுமே காங்கிரசுக் தரமுடியும் என்று தி.மு.க. உறுதியாக கூறி விட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் மேற்கொண்டு எதுவும் பேசா மல் இருந்தனர். தி.மு.க. காங்கிரஸ் தலைவர்கள் யாரும் தொகுதி பங்கீடு குறித்து உறுதியான தகவலைத் தெரிவிக்கவில்லை. எனவே தி.மு.க. காங்கிரஸ் பேச்சுவார்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந் தது.
இந்நிலையில் இரண்டாம் நாளாக இன்று டெல்லியில் சோனியாகாந்தி வீட்டில் பிற்பகல் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் தி-.மு.க. சார் பாக மு.க. அழகிரி மற்றும் தயாநிதிமாறனும் காங்கிரஸ் சார்பாக பிர ணாப் முகர்ஜி, அகமது பட்டேல் மற்றும் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதாகவும், காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் ஆலோசனைக்குப்பிறகு டெல்லியில் குலாம் நபி ஆசாத் செய்தியா ளர்களிடம் தெரிவித்தார்.

காங்கிரசுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகுதிகளை விட மூன்று தொகுதி கள் தி.மு.க. அதிகமாக ஒதுக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. (1), முஸ்லீம் லீக் (1) தொகுதிகளை விட்டுத்தர விருப்பம் தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவி க்கின்றன.

( நாளேடு ஒ ன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: