Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கூகுள் தரும் விரைவுத் தகவல்

ஒரு நாடு குறித்த பல தகவல்கள் நமக்கு அடிக்கடி தேவையாய் இருக்கும். குறிப்பாக நாம் ஒரு நாட்டைப் பற்றிய சிறு அறிக்கை அல்லது தகவல் தொகுப்பி னைத் தயாரிக்க பல வகையான தகவல்கள் தேவைப்படும். எடுத் துக் காட்டாக, அதன் ஜனத் தொகை, ஆண்டு பொருளாதார வளர்ச்சி, அது உலக மேப்பில் எங்குள்ளது போன்ற கேள்விகளுக்கு நமக்கு விடையாகப் பலவகை தகவல்கள் தேவைப்படுகின்றன.

இவற்றைப் பெற, நாம் ஏதேனும் சர்ச் இஞ்சின் சென்று, நாட்டின் பெயரைக் கொடுத்துப் பின்னர் கிடைக்கும் தள முகவரிகளைக் கிளிக் செய்து தகவல்களைத் தேடிப் பெறுவோம்.

ஆனால், இப்போது கூகுள் சர்ச் இஞ்சின் இந்த தகவல்களை மிகவும் எளிமையாவும் வேகமாகவும் பெறும் வகையில் இயங் குகிறது. எடுத்துக்காட்டாக, ஜெர்மனியின் ஜனத்தொகை என்ன வென்று அறிய என சர்ச் இஞ்சின் கட்டத்தில் population Germany என்று கொடுத்தால் போதும். ஒரு நாட்டின் தேசிய கீதம் அறிய நாட்டின் பெயருடன் anthem என்றும், தலைநகர் அறிய capital city என்றும், தேசியக் கொடி குறித்துத் தெரிந்து கொள்ள flag என்றும் கொடுத்தால் போதும். எவ்வளவு எளிது பார்த்தீர்களா !!

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: