களவாணி படத்தை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீ-மேக் செய்வதும், அந்த இரண்டு மொழிக ளிலும் ஓவியாவே ஹீரோயினாக நடிப்பதும் ஏற்கனவே தெரிந்த சங் கதிதான். ஒரே மாதிரியான கேர க்டரில் நடிக்கும் நடிகைகளே அந்த கேரக்டர் சுத்த போர் என்று கூறிவரும் இக்காலகட்டத்தில், ஒரே கேரக்டரில் மீண்டும் மீண்டும் நடிப்பது போர் அடிக்கவில்லை; இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வாய்ப் பாக இருக் கிறது, என்று கூறி தனது வெற்றியின் ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார் ஓவியா. அவரது நடிப்பில் கன்னட த்தில் கிரத்தாக என்ற பெயரில் உருவாகி வரும் களவாணி படம் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டி
விட்டது. தெலுங்கு பதிப்பு விரைவில் தொடங்க விருக்கிறது.
இதுபற்றி ஓவியா அளித்துள்ள பேட்டி யில், களவாணி படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத படம். அந்த படத்தில் நடித்தபோது நிறைய கற்றுக் கொண் டேன். அதே படத்தின் ரீ-மேக்கில் நடி க்க… அதுவும் 2 மொழிகளில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம்.முதல் படத்தில் விட்ட கோட்டை இரண்டாவது படத்தில் பிடித்துக் கொள்ளலாம். முதல் இரண்டு படங்களிலும் விட்ட கோட் டை மூன்றாவது படத்தில் பிடித்துக் கொள்ளலாம். இப்படி யொரு வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்? அதேடு வித்தியாசமான லொகே ஷன்களில் படப்பிடிப்பு நடக்கிறது. இதனால் போரடிக் கவில்லை. உண்மையிலேயே ரொம்ப என்ஜாய் பண்ணி நடித்துக் கொண்டிருக்கிறேன், என்று கூறியு ள்ளார்.
( நாளேடு ஒ ன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )