தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் இடையே தொகுதி
களை பங்கீடு செய் வதில் பிரச்சினை ஏற்ப ட்டது. காங்கிரஸ் கட்சி 63 இடங்களை கேட்கிறது. அது வும் அந்த 63 தொ குதிகள் எவை என்பதை தாங்களே முடிவு செய்து கொள்வோம் என்று வலியுறுத்தி வருகி றது. காங்கிரசின் கோரிக் கைகள் ஏற்க முடியாதவை என்று கூறி தி.மு.க. 63 இடங்களை கொடுக்க மறுத்து விட்டது. கூட்டணியில் உள்ள பா.ம.க. (31), விடுதலை சிறுத்தைகள் (10), கொங்கு நாடு முன் னேற்றக் கழகம் (7), முஸ்லிம் லீக் (3), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளுக்கு 52 இடங்கள் கொடுக்கப்பட்டு விட்ட தால், மீதமுள்ள 181 தொகுதிகளில் 60 இடங்களை மட்டுமே தர முடியும் என்று தி.மு.க. உறுதியாகி கூறி விட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரசார் மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருந்தனர். இதையடுத்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் இருந்து விலகுவதாக தி.மு.க. அறிவித்தது. தி.மு.க. சார்பில் இடம் பெற்றுள்ள 6 மத்திய மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
தி.மு.க. மந்திரிகள் 6 பேரும் நேற்று காலை பிரதமரை சந்தித்து ராஜி னாமா கடிதம் கொடுக்க தயாரான போது காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப்முகர்ஜி முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் தொடர்புகொண் டு மீண்டும் தொகுதி பங்கீடு குறித்து பேசினார். இதனால் தி.மு.க. மந்திரிகள் ராஜினாமா கடிதம் கொடுப்பது ஒரு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களும், தி.மு.க. மந்திரிகளும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்கள். அதில் எந்தவித முன் னேற்றமும் ஏற்பட வில்லை. நேற்றிரவு 9.30 மணிக்கு சோனியா காந்தி வீட்டுக்கு மந்திரிகள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் இருவரும் சென்றனர். சுமார் 40 நிமிடங்கள் சோனியா வுடன் பேசினார்கள். அந்த பேச்சு வார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்பட வில்லை என்று தெரிய வந்துள்ளது. எத்தனை தொகு திகள்? எந்தெந்த தொகுதி? என்ற இரு விஷயங்களிலும் தி.மு.க., காங்கிரசார் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதாக தெரிகிறது.
இந்த இறுக்கத்தை தளர்த்தும் வகையில் தி.மு.க. ஒரு யோசனை கூறியது. அதாவது காங்கிரஸ் கட்சி கடந்த 2006-ம் ஆண்டு தேர்த லில் போட்டியிட்ட 48 தொகுதிகளை அப்படியே தந்து விடுவ தாகவும் மீதமுள்ள 12 தொகுதிகள் தாங்கள் நிர்ணயிக்கும் தொகு தி களாகத்தான் இருக்கும் என்று தி.மு.க. தரப்பில் கூறப் பட்டது. தி.மு.க.வின் இந்த யோசனையில் ஏற்கனவே போட்டி யிட்ட 48 தொகுதிகளை அப்படியே பெற்றுக் கொள்வது என்பதை காங்கி ரசும் ஏற்றுக் கொண்டது. ஆனால் மீதமுள்ள இடங்கள் 12 என்ப தற்கு பதில் 15 ஆக அதாவது மொத்தம் 63 தொகுதிகளாக தர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
அதோடு அந்த 15 தொகுதிகளிலும், நாங்கள் விரும்பும் தொகுதி களாகத்தான் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் பிடிவா தமாக கூறி விட்டது. தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் தற்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு இது தான் காரணமாக கூறப்படுகிறது. இந்த சிக்கலை நிவர்த்தி செய்து கொள்ள தி.மு.க.-காங்கிரஸ் தலைவர்களிடம் இன்று (செவ் வாய்) 2-வது நாளாக பேச்சு நீடித்தது. முதல்-அமைச்சர் கருணா நிதியுடன் சோனி யா இன்று போனில் பேசுவார் என்று தெரி கிறது. அதன் பிறகு தி.மு.க.- காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சில் உடன்பாடு வருமா? என்பது தெரிய வரும்.
( நாளேடு ஒ ன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )