Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பட்ஜெட் போன்கள் சந்தையில் …

சில வேளைகளில் பேசுவதற்கு மட்டும் கூடப் போதும் எனக் குறைந்த விலையில் மொ பைல் போன்களைத் தேடு வோம். வேலைக்காரர்களுக்கு, அடிக்கடி பொருட்களைத் தொலை க்கும் பழக்கம் உள்ள பள்ளி செல்லும் சிறுவர் களுக் கு, குறைந்த காலம் பயன்ப டுத்திப் பின் அழித்துவிட எனப் பலவற்றை இது போன்ற காரணங்களாகக் கூறலாம். ஒரு சிலர், எதற்கு இவ்வளவு பணம் போட்டு மொபைல் போன்; ஓரளவிற்கு வசதிகள் இருந்தால் போதும் என்று அடுத்த நிலையில் போன் களைத் தேடுவார்கள். இந்த நோக்கத்துடன் மொபைல் போன் சந்தையில் வந்த போது சில போன்கள் கண்ணில் பட்டன. அவற்றை இங்கு காணலாம்.

1. எல்.ஜி. ஏ 165: இந்த போன் ஒரு பார் டைப் போன். எடை 81 கிராம் மட்டுமே. இதன் பரிமாணம் 110 x 47.5 x 14.1 மிமீ. ஒரு முறை சார்ஜ் செய்தால், 14 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். நான்கு பேண்ட் அலைவரிசையில் செயல்படுகிறது. இதன் வண்ண டிஸ்பிளே திரை 5.1 செமீ. 0.3 மெகா பிக்ஸெல் கேமரா 4 எக்ஸ் டிஜிட்டல் திறனுடன் உண்டு. போன் மெமரி 3.9 எம்பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் தரப்பட்டுள்ளது. 2ஜிபி கார்ட் வரை கொள்ளும். இதன் முக்கிய அம்சம் இரண்டு சிம்களை இது இயக்குவதே. வீடியோ பைலையும் இது இயக்கும். எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். செய்தி வசதி உண்டு. எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளன. புளுடூத் மூலம் பைல்களைப் பரிமாறலாம். அக்ஸிலரோமீட்டர் சென்சாரும் தரப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 2.740.

2. சாம்சங் இ 1172: நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த பார் வடிவ போன், 72 கிராம் எடையில், 108.7 x 46.1 x 14.1 மிமீ அளவில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் வண்ணத்திரை 1.52 அங்குல அகலத்தில் உள்ளது. இதில் 1 எம்பி மெமரி தரப்பட்டுள்ளது. இதிலும் இரண்டு சிம்களைப் பயன்படுத்தலாம். கருப்பு மற்றும் பிரவுண் வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் கேமரா தரப் படவில்லை. எஸ்.எம்.எஸ். மட்டும் சில வரையறை களுக்குள் இயக்கப்படுகிறது. எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் பேசலாம். இதன் அதிக பட்ச விலை ரூ. 1,365.

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: