Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புளுடூத் பெயர்க் காரணம்

தகவல் பரிமாற்றத்தில் இன்று பெரிய அளவில் நமக்கு உதவிடும் தொழில் நுட்பம் புளுடூத் தொழில் நுட்பம். முதலில் இந்தப் பெயரைக் கேள்விப் படுப வர்கள், ஏன் இந்தக் கலர் பெயர் தரப்பட்டுள்ளது? என்ற கேள்வியை மனதிற்குள்ளா கவே போட்டுக் கொள்வார்கள். ஏதோ காரணம் என்று எண்ணி, சரியான காரணம் தேடிப் பார்க்காமல் அப்படியே விட்டு விடுவார்கள். அதற்கான காரணத்தைப் பார்ப்போமா?

900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென் மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தைத் தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத் தினை உருவாக்கினார். பின் 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார்.

புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் நாடுகள் என அழைக்கப் படும் டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து நாட் டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தான் உருவாக்கினர்.

இவர்களுக்கு அந்த சரித்திர காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில், தாங்கள் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு புளுடூத் என்று பெயரிட்டனர். மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும் விதத் திற்கும், வண்ணத்திற்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: