மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை அடுத்து வாகன விலையை மீண் டும் உயர்த்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திட்ட மிட்டுள்ளது. இந் நிறுவனம் இவ்வாண்டில் இரண்டாவது முறையாக விலையை உயர் த்துகிறது என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகவலை ஜென ரல் மோட்டார்ஸ் இந்தியா நிறு வன துணை தலைவர் பாலேந் திரன் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் இந்த புதிய விலை ஏற்றம் அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜென ரல் மோட்டார்ஸ் நிறுவனம் காரண்களின் விலையை ஜனவரி மாதத்தில் 2 சதவீதம் உயர்த்தியது குறிப் பிடத்தக்கது. உலோகம் மற்றும் ரப்பர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )