Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்று மாலை அ.தி.மு.க. கூட்டணி தொகுதி உடன்பாடு

அ.தி.மு.க. அணியில் ம.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், புதியதமிழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 14 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் தே.மு.தி.க.விற்கு 41 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதியும், புதிய தமிழகத் திற்கு 2 தொகுதியும், மூவேந்தர் முன்னனி, இந்திய குடியரசு கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 49 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு அ.தி.மு.க. ஒதுக்கியுள்ளது. ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த மூன்று கட்சிகளும் அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பட்டியலை கொடுத்துள்ளது.
ம.தி.மு.க. சார்பில் 25 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 15 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார் பில் 20 தொகுதிகளும் கேட்டு பட்டியல் கொடுக்கப்பட் டுள்ளன. இதற்கிடையில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதி பங்கீட் டில் ஏற்பட்ட சிக்கல் காரண மாக அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டை தள்ளி வைத்தது.

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் காங் கிரஸ் சேருமா? என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முற்றுப்புள் ளி வைக்கும் வகையில் தி.மு.க.- காங்கிரஸ் இடையே மீண்டும் உடன்பாடு ஏற்பட்டது. இதன்மூலம் அரசியல் களத்தில் மூன்று நாட்களாக நிலவி வந்த பரபரப்பு நேற்று மாலை அடங்கியது.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி கட்சி தொகுதி உடன் பாடு இன்று மாலை ஏற்படுகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மூன்று கூட்டணி கட்சி தலைவர்களையும் தனித் தனியாக போயஸ் கார்டனுக்கு அழைத்து பேசி தொகுதி உடன் பாடு செய்கிறார். ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட சில சமூதாய கூட்டமைப்புகளுக்கும் அவர் தொகுதிகளை ஒதுக் குகிறார்.

கடந்த சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க. 35 தொகுதியிலும், மார் க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 13 தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்டு 10 தொகுதி யிலும் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தொ குதி பங்கீட்டை இன்று முடித்து விட்டு அடுத்த கட்டமாக வேட் பாளர் தேர்வு, தேர்தல் பிரசார பயணத்திட்டம் போன்றவற்றை உடனே ஜெயலலிதா அறிவிக்கிறார்.
( நாளேடு ஒ ன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: