Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிலந்தி கடித்தால், ஆண்களின் “செக்ஸ்” உணர்வு அதிகரிக்கும் – ஆய்வில் புதிய தகவல்

பொதுவாக சிலந்தி பூச்சிகள் கடித்தால் உடலில் காயங்கள் ஏற்படும். அதன் மூலம் நோய்கள் உருவாகும். ஆனால் பிரேசிலியன் வகை சிலந்தி பூச்சிகள் கடித்தால் ஆண்களின் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வை அமெரிக் காவில் ஜார்ஜியா மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் மேற் கொண்டனர். அப்போது, பிரேசிலியன் வகை சிலந் தியின் விஷம் ஆண்களுக்கு செக்ஸ் உணர்வை தூண்டி நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க செய்ய வல்லது என கண்டறிந்தனர்.
இந்த வகை சிலந்தி பூச்சிகள் தெற்கு மற்றும் மத்திய அமெரிக் காவில் உள்ளன. இவற்றில் உள்ள விஷத்தின் பல விதமான மூலக்கூறுகள் உள்ளன. அவை உடலுக்குள் சென்றவுடன் பல வித மாற்றங்களுடன் ஒருவித கிளு கிளுப்பை ஏற்படுத்தும் என்று உளவியல் நிபுணர் டாக்டர் கெனியா நன்ஸ் தெரிவித்து ள்ளார்.
அதே நேரத்தில் பல பக்க விளைவுகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடல் தசைகளின் கட்டுப்பாடு இழப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமமும் உண்டாகும். இதன் மூலம் சிலரின் உயி ருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகும். எனவே “செக்ஸ்” உணர்வை அதிகரிப்பதற்காக பயன்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: