Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சீனாவில் 700 வருடங்கள் பழமையான மம்மி

சீனாவின் கிழக்கு பகுதியில் சுமார் 700 வருடங்கள் பழமை யானதாகக் கருதப்படும் பெண் மம்மி யொன்று கண்டு பிடிக்கப்பட்டு ள்ளது.

சீனாவின் ஜியாங்சு மாகா ணத் தின் டயிசொவு என்ற நகரில் வீதிகளை அமைக் கும் பணியி ல் ஈடுபட்டிருந்த பணியாளர் களே இதனை முதலில் கண்டு ள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப் பெண் மம்மியானது 1368- 1644 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்த சீனாவின் மிங் அரச வம்சத்துப் பெண் என ஆராய் ச்சியாளர்கள் தெரி விக்கி ன்றனர்

இந்த மம்மியில் அணிவிக் கப் பட்டிருந்த ஆடையும் அதனைப் பறைசாற்றுவதாக அவர்கள் குறிப்பி டுகின்றனர்.

இதனுடன் வேறு இரு கல்லறைகளும் அங்கு கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

இந்த மம்மியானது மிகவும் நுணுக்கமான முறையில் பதனிடப் பட்டுள்ளது. தலை முதல் கால்பாதணிகள் வரை ஆச்சரியப் படத்தக்க வகையில் இது பாதுகாக்கப்ப ட்டுள்ளது.

இதன் கண் இமைகள், முடி, உடலின் தோல் ஆகியன இற்றை க்கும் மிஞ்சி இருப்பதானது, சீனர்களும் மனித உடல் பதனிடலில் சிறந்து விளங்கிய மையை  எடுத்து க்காட் டுவதாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவி க்கின்றனர்.

இதன் வலது கையில் தோலானது பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்த துடன் அதில் மோதிரமொன்றும் காணப்படுகின்றது.

இம் மம்மியின் உயரம் 1.5 மீற்றர்களாகும். மண் நிற திரவம் அடங்கிய சவப்பெட்டி ஒன்றினுள் இருந்தே இவ்வுடல் கண்டு பிடிக்கப் பட்டு ள்ளது.

பட்டு மற்றும் சிறிது பருத்தியினால் ஆன ஆடையே இம் மம்மிக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பட்டு மற்றும் பருத்தியை பாதுகாப்பது கடினம் என்ற போதிலும் இம் மம்மியில் அவை சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக சீனாவின் வெங் வீயினில் உள்ள நூதனசாலை அதிகாரி ஒருவர் குறிப்பி டுகின்றார்.

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: