Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழ்நாட்டில் இருமுனைப் போட்டி : தி.மு.க.-அ.தி.மு.க. அணிகள் மோதல் …

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள் ளது. வேட்பு மனுத் தாக்கல் வருகிற 19-ந்தேதி (சனிக் கிழமை) தொடங்  குகிறது. மனுத்தாக்கலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலை யில், கடந்த சில தினங் களாக தமிழக தேர்தலில் கட்சிகளிடையே இரு முனைப் போட்டி ஏற்ப டுமா? அல்லது மும்முனைப் போட்டி உருவாகுமா? என்ற கேள்விக் குறி நிலவியது.

தி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் சமரசம் ஏற்ப டாவிட்டால் மும்முனைப் போட்டி ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் தி.மு.க. – காங்கிரஸ் கட்சி களிடையே நேற்று சமரச உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசியல் சூழ்நிலையில் முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் நேருக்கு நேர் போட்டி யிடுவது உறுதியாகி விட்டது.

பா.ஜ.க. உள்ளிட்ட சில கட்சிகள் தேர்தலை தனியாக சந்தித் தாலும், தி.மு.க.- அ.தி.மு.க. தலைமையில் தான் நேரடி பலப் பரீட்சை நடைபெறும். கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க. தனியாக போட்டியிட்டதால், மும் முனை போட்டி ஏற்பட்டது. தற்போது தே.மு.தி.க., அ.தி. மு.க. அணியில் இடம் பெற்றுள்ளதால் 2011 தேர்தல் களம் மிகுந்த விறுவிறுப்பை அடைந்துள்ளது. தி.மு.க. தலைமையிலான அணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய 7 கட்சிகள் உள்ளன. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தி.மு.க.-121, காங்கிரஸ்-63, பா.ம.க.-30, விடுதலைச் சிறுத்தைகள்-10, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்-7, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-2, மூவேந்தர் முன்னேற்றக் கழகம்-1 இடங்களில் போட்டியி டுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வலுவான பலத் தை உறுதி செய்யும் வகையில் தி.மு.க. கூட்டணி அமைந்து ள்ளது. தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்ததைத் தொடர்ந்து, ஒவ் வொரு கட்சியும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தொடர்பாக தி.மு.க. கூட்டணியில் தற்போது பேச்சு நடந் து வருகிறது. காங்கிரசும், பா.ம.க.வும் பெரும்பாலும் கடந்த தேர் தலில் போட்டியிட்ட தொகுதிகளில் களம் இறங்கும் என்று தெரிய வந்துள்ளது.

கொங்கு மண்டலத்தில் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 15 தொகு திகள் பட்டியலை கொங்குநாடு முன்னேற்றக் கழகம் கட்சியினர் கொடுத்துள்ளனர். அதில் இருந்து 7 தொகுதிகளை தி.மு.க. ஒது க்கி கொடுக்க உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 7 தனித் தொகுதியிலும் 3 பொதுத் தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னணி, குடியரசு கட்சி, நடிகர் கார்த் திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, தேசிய லீக், பார்வர்டு பிளாக் உள்பட 15 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மனித நேய மக்கள் கட் சிக்கு 3 தொகுதிகள், புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகள், மூவேந்தர் முன்னணி மற்றும் குடியரசு கட்சிக்கு தலா ஒரு இட ங்களை ஜெயலலிதா கொடுத்துள்ளார்.

மீதம் 186 தொகுதிகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. குறைந்த பட்சம் 130 முதல் 140 தொகுதிகள் வரை போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு எஞ்சும் சுமார் 50 முதல் 60 தொகு திகள் ம.தி.மு.க., இடதுசாரிகள் கட்சிகளுக்கு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இன்று மாலை அ.தி.மு.க. கூட்டணியில் ஒவ் வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்ற முழு விபரமும் வெளியாகி விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இன்னும் சில தினங்களில் இரு அணிகளிலும் ஒவ்வொரு கட்சி யும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற விபரம் தெரி ந்து விடும். அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக விஜய் ரசிகர்க ளும் களம் இறங்கியுள்ளனர். இதனால் அ.தி.மு.க. கூட்டணி வேட் பாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் பலத்த சவாலாக இருப்பா ர்கள் என்று தெரிகிறது.

இதற்கிடையே எல்லா கட்சிகளிலும் வேட்பாளர் தேர்வும் சூடு பிடித்துள்ளது. எல்லா கட்சிகளும், தேர்தலில் போட்டியிட விரும் பும் தங்கள் கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்று ள்ளன. அந்த மனுக்களை கட்சி மூத்த தலைவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். தி.மு.க. சார்பில் நேற்று முதல் அண்ணா அறிவா லயத்தில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க நேர்காணல் தொட ங்கி நடந்து வருகிறது.

14-ந்தேதி தி.மு.க. நேர்காணல் முடிந்து விடும். அதன் பிறகு ஓரிரு நாட்களில் தி.மு.க.வின் 121 வேட்பாளர்கள் யார்-யார் என்ற விபரம் தெரிந்து விடும். பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் பற்றி தெரிய வந்ததும் வேட்பாளர்களை அறிவிக்க தயாராக உள்ளன. அ.தி.மு.க. சார் பில் பல்லாயிரக்கணக்கானவர்கள் விருப்ப மனு கொடுத்து ள்ளனர். அந்த மனுக்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெய லலிதா தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். இன்னும் சில தினங்களில் அவர் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் மிகுந்த எதிர் பார்ப்பு நிலவுகிறது.
அ.தி.மு.க. அணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தே.மு.தி.க. 11-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை நேர்காணல் நடத்த உள்ளது. விருப்ப மனு கொடுத்திருப்பவர்கள் உரிய ஆவணங்களுடன் வருமாறு விஜயகாந்த் அறிவித்துள்ளார். தே.மு.தி.க. வுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவான பிறகு அதற்கு ஏற்ப வேட்பா ளர்களை தேர்வு செய்து விஜயகாந்த் அறிவிக்க உள்ளார். ம.தி. மு.க., இடதுசாரி கட்சிகளும் வேட்பாளர் தேர்வை ஓசையின்றி நடத்தி கொண்டிருக்கின்றன.

234 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கும் பா.ஜ.க. ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது. அடுத்த வாரம் இதே நாளில் வேட்பாளர்கள் அறிவிப்பு பரபரப்பாக இரு க்கும். 19-ந்தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியதும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரமும் ஜெட் வேகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கி விடும். இன்னும் 2 வாரங்களில் 234 தொகுதி களிலும் அனல் பறக்கும் பிரசாரத்தை காணலாம். நடிகர்- நடிகை களின் பிரசாரம் களை கட்டும்.

தேசிய கட்சிகளின் தலைவர்கள் சோனியா, அத்வானி ஆகியோர் ஏப்ரல் முதல் வாரம் தமிழ்நாடு வர வாய்ப்புள்ளது. ராகுல் காந்தி யும் தமிழ்நாட்டில் சூறாவளி பிரசாரத்துக்கு திட்டமிட்டுள்ளார். அப்போது தமிழக தேர்தல் பிரசாரம் அனல் பறப்பதாக இருக்கும்.
( நாளேடு ஒ ன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: