Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‌மலர்கள் மணம்வீசுவது எவ்வாறு?

எவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள். ஒவ்வொன்றும் ஒரு விதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை, அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கி ன்றன. சில செடிகளின் மல ர்கள் என்று நினைப்பது உண் மையில் மலர்களாக இருக் காது. சில செடிகளில் வெண் ணிற உறைகளில் இருந்து எட்டிப் பார்ப்பவை மலர்களே அல்ல. மலர் போலத் தோற் றமளிக்கும் போலிகள்! சில செடிகளின் வண்ண இலைகளே மலர்கள் போல் காட்சியளிக்கும்.

மலர்கள் இல்லாதவற்றை மலர்கள் என்று எண்ணுகிறோம். சில செடிகளில் மலர்களை நம் மால் அடையாளம் தெரிந்து கொள்ள முடிவதில்லை. புற் களின் நுனியில் உள்ள சிறு துணுக்குகள் புற்களின் மலர் கள்தான்! சில தானியங்களின் இளங்கதிர்களே அவற்றின் மலர்கள்.

பூந்தாதையோ, விதைகளை யோ அல்லது இரண்டையுமே உருவாக்கும் தொகுதியே மலர்களாகும். விதைகளை உடைய தாவரத்துக்கே மலர்கள் உள் ளன. விதைகள் உருவா க்கு வதற்குக் காரணமாக உள்ள தாவரத்தின் பாகங் களே மல ர்கள் என்று சொல் லலாம்.

மகரந்தச் சேர்க்கை புரிய உத வும் பூச்சியினங்களைக் கவர் ந்திழுக்க, பூக்கள் நறுமண வலையை வீசுகின்றன. பூவி தழ்களிலேயே வாசனை தரும் மிகச் சிறிய துகள்கள் உள்ளன. அவை யே நறுமணத்தை ஏற்படுத்துகின்றன.

பூச்சிகளை மகரந்தம் இருக் கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டியே நறு மணம் என்கிறார்கள், தாவர வியல் நிபுணர்கள்.

சில மலர்களின் இதழ்களில் உள்ள ஒருவித எண்ணை, நறு மணத்தை உண்டு பண் ணு கிறது. அந்த எண்ணைகளைத் தாவரங்கள் தங்கள் வளர்ச்சியி ன்போது உற்பத்தி செய் திருக்க வேண்டும். மிகச்சிக் கலான அப் பொருள், நடை முறையில் உருக்குலை ந்தோ, சிதைந்தோ எண் ணை யாக மாறி காற்றிலோ, வெயிலிலோ ஆவியாகி நறு மணத்தை வெளியிடுகிறது.

எல்லா மலர்களின் நறும ணமும் ஒரேவிதமாக இருப் பதில்லை. சிலவற்றை நாம் விரும்புவோம். சில நமக்குப் பிடிக்காது. ஆனா ல் பூச்சியினங்களுக்கு ஒவ்வொரு நறுமணமும் நன்றாக நினை வில் இருக்கும். தங்களுக்கு விருப்பமான நறு மணத்தை அவை அறிந்திருக்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்
ப‌டங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: