Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலர்ந்த சருமத்திற்கு இளநீர் & தேங்காய்ப் பால் சிகிச்சை

பொதுவாக பெண்களுக்கு முப்பதைந்து வயதிற்கு மேல் சருமம் வறண்டு காணப்படும். ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே முகம் வறண்டு விடலாம்.

இவர்களுக்கு கோக்கனெட் ஃபே ஷியல் செய்தால் உடனே முகம் பளபளப்பாகி புத்துணர்ச்சி பெறு ம். இந்த எளிமையான சிகிச்சை யை வீட்டிலேயே செய்ய லாம். பரு மற்றும் எண்ணெய்ப் பசை முகம் உள்ளவர்கள் இந்த சிகிச்சை செய்யவேண்டாம்.  

இளநீர் சிகிச்சை: கோனெட் ஃபேஷியல் செய்வதற்கு முன்பு கொஞ்சம் இளநீரில் காட்டனை நனைத்து எடுத்து முகத்தை துடைக்க வேண்டும். அப்படி துடைக்கும் போது ஒரே பக்கமாக துடைக்காமல் மேல் கீழ் இடம், வலம் என்று நான்கு பக்கங் களிலும் துடைத்து எடுக்க வேண்டும்.

அப்போதுதான் முகத்தில் உள்ள அழுக்கு முழுவதும் வெளி யேறும். டூவீலரில் வெளியில் வேலைக்குச் செல்பவர்கள் தின மும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது இதை மட்டும் செய்தாலே போதும்.

முகம் பொலிவாக இருக்கும். முகத்திற்கு குளுமை கிடைக்கும். இது முழுக்க முழுக்க இயற்கை சிகிச்சை என்பதால் முகத்தில் அலர்ஜி, எரிச்சல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படாது.
தேங்காய்ப் பால் சிகிச்சை

மைதா மாவு, தேங்காய்ப் பால் தாலா 2 ஸ்பூன், தேங்காய் துருவல் 1 ஸ்பூன் கலந்து முகத்தில் பேக்போல செய்து போடவும். பதினை ந்து நிமிடம் ஊறிய பிறகு கையில் கொஞ்சமாக தண்ணீர் எடுத்து வட்ட வடிவில் முகத்தில் தேய்த்து எடுக்கவும். அப்படி எடுக்கும் போது முகத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படும். பின்பு வெதுவெதுப்பான நீரில் துடைத்து எடுக்கவும்.
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: