Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (13/03)

அன்புள்ள அம்மாவிற்கு —
நான், 29 வயது வாலிபன். முர ட்டு உருவம் எனக்கு. உரத்தக் குர லில் பேச முடியாது என்னால். நான் தற்சமயம், மும்பையில், ஒரு மொபைல் போன் கம்பெ னியில், விற்பனை பிரிவு அதி காரியாக பணியாற் றுகிறேன். பிளஸ் 2 வரை, கார்ப்பரேஷன் பள்ளியில்தான் படித்தேன்; அத னால், சரளமாக ஆங்கிலம் பேச வராது.

மூன்று வருடங்களுக்கு முன், விள ம்பர ஏஜன்சியில் பணிபுரி யும் பெண்ணை, “காதலர் தினம்’ அன்று சந்தித்து, பழகி, காதலா னேன். முதன் முதலாக நாங்கள் சந்தித்த தேதி, பிப்ரவரி 14, 2008. அவளும், தமிழகப் பெண்தான். திருநெல்வேலியின் முக்கூடல் தான் அவளின் சொந்த ஊர்; என் வயதுதான் அவளுக்கும். என்னுடைய மாத சம்பளம், 52 ஆயிரம் ரூபாய்; அவளின் மாத சம்பளம், ஒண்ணேகால் லட்சம் ரூபாய்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட, சிறப்பாக ஆங்கிலம் பேசு வாள். இவளுக்கு சமமாக ஆங்கிலம் பேச வேண்டும் என்பதற் காக, பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, கோச்சிங் கிளாஸ்கள் போனேன் அம்மா. அவளுக்கு தமிழ், ஆங்கிலம் தவிர, இந்தி, பிரெஞ்ச் பேச, எழுத தெரியும். மியூசிக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் வாசிப்பாள்.

விடுமுறை நாட்களில், அவளது பிளாட்டுக்கு நான் போவேன்; சில சமயங்களில், என்னுடைய பிளாட்டுக்கு அவள் வருவாள். எங்களுக்குள் செக்ஸ் இல்லையே தவிர, முத்தம் போன்ற சிறு சிறு சந்தோஷங்கள் உண்டு. எங்கள் காதலுக்கு வில்லன் இல்லை என, அற்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய சந்தோஷத்தில், விதி மண்ணை வாரிக் கொட்டியது.

எல்லாருக்கும் முன், நுனி நாக்கு ஆங்கிலம், பண்டிதர் தமிழ் பேசும் என் காதலி, நானும், அவளும் தனித்திருக்கும் போது, கெட்ட வார்த்தைகள் பேச ஆரம்பித்து விடுகிறாள். என்னை பெய ரிட்டு அழைப்பதற்கு பதிலாக, கெட்ட வார்த்தைகள் சொல்லித் தான் அழைக்கிறாள். எங்களுக்கு பரிட்சயமான எல்லாருக்கும், கெட்ட வார்த்தையில் பட்டப்பெயர் வைத்திருக்கிறாள்.

சிறுவயதில் கெட்ட வார்த்தைகள் பேசுவோருடன், பேசக்கூடாது என தடை விதித்திருந்தார் என் அப்பா; நானும் பேச மாட்டேன். அப்படிப்பட்ட எனக்கு, இப்படிப்பட்ட காதலியா?

அவளுடைய பிளாட்டுக்கு நான் ஒரு தடவை போயிருந்த போது, அவளுடைய டைரியை புரட்ட நேர்ந்தது. டைரியில், ஆண் – பெண் உறுப்புகளை, கேலி சித்திரமாக வரைந்திருந்தாள். தவிர, தினம் நடப்பதை சேரி ஸ்லாங்கில் எழுதியிருந்தாள். சாம்பிளுக்கு எதை யாவது நான் சொன்னால், அதை அச்சில் வெளியிட முடி யாததாக இருக்கும்; அவ்வளவு ஆபாசம். திருக்குறளுக்கு பொ ருள் சொல்வது போல, தான் பேசும் கெட்ட வார்த்தைகளுக்கு, அருஞ்சொற்பொருள் விளக்குவாள்.

“நீ இப்படி பேசுவது சரிதானா?’ எனக் கேட்டேன். அதற்கு அவள், “என்னடா செய்றது? 15 வயசு வரைக்கும் பாட்டி வீட்ல வளர்ந்தவ நான். பாட்டி கெட்ட வார்த்தையில் டிக்ஷனரி போடும் அளவுக்கு நிபுணி. அவளின் தோழிகள் கூட, கெட்ட வார்த்தை பேசுவதில், “எக்ஸ்பர்ட்’கள்! எனக்கு சின்ன வயதில் சோறூட்டி வளர்த் தாளோ, என்னவோ, தினம் நூறு கெட்ட வார்த்தைகளை ஊட்டித் தான் வளர்த்தாள் பாட்டி.

“மேலே படித்து, சென்னைக்கு வந்தேன். அங்கு யாரிடமும் கெட்டவார்த்தை பேசி பார்க்க வாய்ப்பில்லை. படிப்புக்கு பின், வேலை நிமித்தம் மும்பைக்கு வந்தேன். இங்கும் உன்னை சந்திக்கும் வரை, கெட்ட வார்த்தை பேசும் சான்ஸ் கிடைக்க வில்லை. உன்னை காதலிக்க ஆரம்பித்த ஆறு மாதத்துக்குப் பின், உரிமையா கெட்ட வார்த்தைகளை பேசுகிறேன். “நமநம’ ன்னு இருந்த வாய், இப்பதான், “நச்சுபிச்சு’ன்னு ஆச்சு.

“கெட்ட வார்த்தை பேசலேன்னா, என் நெஞ்சு வெடிச்சிரும்டா. நான் உன்னைத் தவிர யார்கிட்டயும் கெட்டவார்த்தை பேச மாட் டேன்னு, சத்தியம் பண்ணிக் கொடுக்கிறேன்டா. இது, ஒரு காரண ம்ன்னு என்னை கைவிட்டுடாதடா…’ எனக் கூறி, கதறி அழுதாள்.
அந்நியன் படத்தில் மூன்று விக்ரம் இருப்பர். என்னுடைய காத லியோ, இரண்டு தனித்தனி மனுஷிகளாக இருக்கிறாள். ஒருத்தி சோபஸ்டிகேட்டட் ஹைடெக் லேடி; இன்னொருத்தி, லோக்கல் பார்ட்டி.

காதலியின் வாக்குறுதியை நான் முழுவதுமாக நம்பவில்லை. என்னை திருமணம் செய்து கொள்வதற்காக நடிக்கிறாள். கல் யாணத்திற்குப் பின் அந்தரங்கத்திலிருந்து, அரங்கத்துக்கு தாவி விடுவாள் என பயப்படுகிறேன்.

நெட்டில், டவுன்லோட் செய்து, வாரமலர் இதழ் வாசிப்பதுண்டு; அதில் வரும் அன்புடன் அந்தரங்கம் பகுதியையும் வாசித்து வருகி றேன்.

வெளியில் ஹைடெக் லேடியாகவும், உள்ளுக்குள் லோக்கல் பார்ட்டியாகவும் இருக்கும் பெண்ணை, நான் கல்யாணம் செய்து கொள்ளலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறேன். நீங்கள் தான் என் மனக்குழப்பத்தை தீர்த்து வைக்க வேண்டும்.
— இப்படிக்கு,
கெட்ட வார்த்தைகளில் நீச்சலடிக்கும் அப்பாவி மகன்.

அன்புள்ள மகனுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. உனக்கு ஆலோசனை சொல்லப் போகி றேன் என்று தெரிந்தால், எனக்கும் கெட்ட வார்த்தையில் ஒரு பட்டப் பெயர் சூட்டிவிடப் போகிறாள் உன் காதலி.

கெட்ட வார்த்தைகள், உலகின் எல்லா மொழிகளிலும் உள்ளன. மூன்று லட்சம் வார்த்தைகள் உள்ள ஒரு மொழியில், எப்படியும் ஐயாயிரம் கெட்ட வார்த்தைகளாவது ஒளிந்திருக்கும். ஆங்கில த்தில், “பக், ஷிட், ஆஸ், ஆஸோல்’ போன்ற, பல கெட்ட வார்த் தைகள் புழங்குகின்றன.

உலகின் பல மொழிகளில் பேச்சு மொழியும், எழுத்து மொழியும், 90 சதவீதம் ஒத்துப் போகும்; ஆனால், தமிழின் நிலை வேறு. வீட்டிற்குள் நைந்த நூல் சேலையை கட்டியிருந்துவிட்டு, வெளி யில் செல்லும் போது, பட்டுப் புடவையை கட்டிக் கொண்டு போ வது போலிருக்கின்றனர் தமிழர்கள். நம் மொழியை உருது, இந்தி, ஆங்கிலம் போன்றவை சற்றே தின்று விட்டன.

கெட்ட வார்த்தைகள் நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால், நம் இமேஜ் பாதுகாப்புக்காக அப்படி வார்த்தைகளே தெரியாதது போல் நடிக்கிறோம். கெட்ட வார்த்தை பேசுவது, கூடாரத்துக்குள் ஒட்டகம் இடம் கேட்பது போன்றது. ஓரிரு கெட்ட வார்த்தைகள் பேச சங்கோஜமாய் இருக்கும். அதன்பின், குடிப்பழக்கம் போல பழகி விடும். அப்புறம், சிறிதும் லஜ்ஜையின்றி நிமிடத்துக்கு, 100 கெட்ட வார்த்தை உச்சரிக்கப்படும் அருவியாய் கொட்டும்.

ஒருவருக்கு ஒருவரை கொலை செய்யும் வெறி இருந்தது என வைத்துக் கொள்ளுங்கள். கொலை செய்யப்பட வேண்டியவரை, ஒரு மணி நேரம் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய விட்டால் போதும், கொலை வெறி ஓடிவிடும்.

சிலர், கெட்ட வார்த்தைகளை கொஞ்சும் வார்த்தைகளாக உப யோகிக்கின்றனர். சிலர், மற்றவர் மீது பாலியல் வன்முறை புரிய, பயமுறுத்த அருவருத்து அகல, கெட்ட வார்த்தைகளை பிரயோகி க்கின்றனர்.

உன் காதலி விஷயத்துக்கு வருவோம்.

இளம் பிராயத்தில் கற்றுக் கொண்ட ஒரு வண்டி கெட்ட வார்த் தைகள், அவளது தொண்டை பெட்டியிலிருந்து வெளியே வர துடியாய் துடிக்கின்றன. பணி இடத்தில், நட்பு வட்டத்தில், கெட்ட வார்த்தை பேசினால், வேலை பறிபோகும்; மானம் கப்பலேறும். நீ அவளுக்கு நம்பிக்கையானவன். வெகு சீக்கிரத்தில், உடல், உள் ளம் உள்ளிட்ட அனைத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கப் போகிறாள். அந்த உரிமையில்தான் உன்னிடம் கெட்ட வார்த்தை கள் பேசுகிறாள்.

அவளை எப்படி திருத்தலாம்?
* கெட்ட வார்த்தைகளை உதட்டசைவு இல்லாமல், சப்தம் எழுப் பாமல், உன் காதலியை வாய்க்குள் பேசிக் கொள்ளச் சொல். ஒரு நாளைக்கு பத்து வார்த்தைகள் அனுமதித்து, மெதுவாக குறைத் துக் கொள்ளச் சொல்.

* ஒவ்வொரு கெட்ட வார்த்தைக்கும், மாற்று வார்த்தை கண்டுபி டித்துக் கொடு. “சப்சிடியூட்’ வார்த்தையை உன் காதலி உச்சரி க்கும் போது, கெட்ட வார்த்தை பேசிய சந்தோஷம் அவளுக்கு கிடை த்து விடும்.

* காதலி கெட்ட வார்த்தை பேசும்போது, வீடியோ பதிவு பண்ணி, அவளிடம் காட்டு. அருவருப்பான முகபாவமும், அசிங்கமான உடலசைவுகளும் உன் காதலியை திகைக்க வைக்கும். காதலிக்கு உணர்த்திய பின், வீடியோ பதிவை அழித்து விடு.

* அணை தேக்கி வைத்த காமம் கூட, பெண்களை இப்படி ஆபாச மாக பேச வைக்கும். திருமணமான பின், அலுக்க, அலுக்க தாம்ப த்தியம் மேற்கொண்ட பின், உன் காதலி கெட்ட வார்த்தைகளை அறவே மறக்கக் கூடும்.

* உன் காதலி உன்னிடம் கெட்டவார்த்தைகள் பேசும் போது, அவ ள் அளவுக்கு அல்லது அவளைவிட அதிகமாக நீ கெட்ட வார்த் தைகள் பேசு; விக்கித்து போவாள். கெட்ட வார்த்தைகள் பேசு வதை நிறுத்தினாலும், நிறுத்திக் கொள்வாள்.

* அவள் பேசும் கெட்ட வார்த்தைகள் என்ன அர்த்தம் கொண் டவை? அவை, உன் முன் உச்சரிக்கும் போது, அவை உன்னை எதாவது ஒரு விதத்தில் குறிப்பிடுகின்றனவா? எதிர்காலத்தில் இந்த அனர்த்தங்கள் என்னென்ன விபரீதங்களை உங்கள் திரு மண வாழ்வில் ஏற்படுத்தக் கூடும் என்பதை உணர்த்து.

* ஓய்வு நேரத்தில் நல்ல இசை கேட்கச் சொல். நல்ல இலக்கியம் வாசிக்கச் சொல்; மன இறுக்கம் விலகும். கெட்ட வார்த்தைகள் தலைதெறிக்க ஓடிப் போகும்.

* யோகா, தியானம் போன்றவற்றை, நீயும், அவளும் பயிலுங்கள்.

* மாதம் இருமுறை மவுன விரதம் இருக்கச் சொல்; “வில் பவர்’ கூடும்.

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: