Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

144 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டி?

சட்டசபை தேர்தலில் அ.தி. மு.க. 144 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.   தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க் சிஸ்டு கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், குடியரசு கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்று ள்ளன.
இவற்றில் தே.மு.தி.க., புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, குடியரசு கட்சி போன்றவற்றுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ள்ளன. மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார் த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க. 144 தொகுதிகளில் போட்டியிடும் என தெரி கிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 9 ராசியான நமபர் என கருதப்படுகிறது. எனவே அதன் கூட்டுத் தொகை வருவது போன்று 144 தொகுதிகளில் அ.தி. மு.க. போட்டி யிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் பிறந்த தேதி பிப்ரவரி 24. இதன் கூட்டு தொகை 6 என வருகிறது.   பொதுவாக 3, 6, 9 என்ற நம்பர்கள் ராசியா னவை என நம்பப்படுகிறது. இதிலும் நம்பர் 9 மிகவும் ராசியான வையாக கருதப் படுகிறது. ஆகவே அ.தி.மு.க. 144 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி என அக்கட்சி பிரமுகர் ஒருவர் தெரி வித்தார்.
( நாளேடுஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: