Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்டர்நெட் மையம் – விதிமுறைகள்

பெரும்பாலான முறையற்ற, ஆதாரமற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் தீவிரவாதிகளின் செயல் பாடுகள், இன்டர் நெட் மையங்களிலிருந்தே மேற்கொள்ளப் படுவதனை உறுதிசெய்த, மத்திய அரசு, இந்த சைபர் கபேக்களுக் கான சட்ட திட்டங்களை மேலும் கடுமையாக்கியு ள்ளது.

தகவல் தொழில் நுட்ப சட்ட விதிமுறைகளில், புதிய சட்ட வரை யறைகளும் விதிமுறைகளும் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. இவற்றின் படி, இன்டர்நெட் மையத்தைப் பயன்படுத்த வரும் ஒருவர், தன் அடையா ளத்தினை முறையாகவும், முழு மை யாகவும், நிறைவாகவும் பதிந் தால் மட்டுமே, மையத்தினைப் பயன்படுத்த முடியும். தங்கள் அடையாளம் குறித்து, மையப் பொறுப்பாளரைத் திருப்தி படுத்த முடியாதவர்களை, மையங்களில் இயங்கும் கம்ப்யூட்டர் வழி அதன் வெப் கேமரா கொண்டு படம் எடுக்கப்பட வேண்டும். அந்த போட் டோக்கள், அடையாள பதிவு ஏடுக ளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

பயன்படுத்தும் ஒவ்வொருவர் குறித்த தகவல்கள் மற்றும் பயன்படுத்திய காலம் குறித்த தகவல்கள், பதிவேட்டில் பதியப்பட்டு, குறைந்தது ஆறு மாதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த பதிவே ட்டில், பயன்படுத்தியவர் பார் த்த இன்டர்நெட் தளங்களின் முகவரிகளும் பதியப்பட வேண்டும்.

இன்டர்நெட் இணைப்பிற்குப் பயன்படுத்தப்படும் கம்ப்யூட் டர்களைப் பிரித்து வைக்கும் தடுப்புகள், தரையிலிருந்து நான்கு அடி, ஆறு அங்குல உயரத்திற்கு மேல் இருக்கக் கூடாது. பாலியல், வன்முறை, ஆபாசம் மற்றும் தடை செய்யப்பட வேண்டிய தளங்களை யாரும் பார்க்க முடியாதபடி தடை செய்திடும் சாப்ட்வேர் தொகு ப்புகள், இன்டர்நெட் மைய கம்ப்யூட்டர்களில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: