மார்ச் (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்
அப்பாட… அப்பாவித் தமிழனுக்கு இப்போ துதான் நிம்மதி ஏற்பட் டிருக்கிறது. ஆமாம்! ஒரு வழியாய் தமிழகத்தில் ஓரணியின் கூட்டணிக் குழப்பம் தீர்ந்திரு க்கிறது.
கூட்டணி இருக்குமா? இருக்காதா? அமைச் சர்களின் பதவி வில கல் நிஜமா? நாடகமா? கூட்டணி முறிந்தால், மத்திய அரசு கவிழு மா? கவிழாதா? தமிழகத்தில் மத்திய புலனாய்வுத் துறையின் பிடி இன்னும் இறுகுமா? இப்படியெல்லாம், மண்டை காய்ந்து கொண்டிருந்த தமிழ் நாட்டின் தேர்தல்களம். இங்கிலாந்து இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட்டை விட பரபரப்பாய்… விறுவிறுப்பாய் இருந்தது.
அதிக இடங்கள் – ஆட்சியில் பங்கு – நாமென்ன இவர்களுக்கு சவாரி குதிரையா? என்ற தேசியக் கட்சியின் முரண்டும்… இருப் பது இவ்வளவு தான், இதற்கு மேல் இறங்கிவர தன்மானம் சுயமரியாதை இடம் தரவில்லை என்று விலகல் அறிவிப்பு செய்த, மாநிலக் கட்சியின் மிரட்டலும், தேர்தல் திருவிழாவில் சந்தடி இன்றி தொலைந்து போயின•
இந்த அணியில்தான் இப்படியொரு கூத்து என்றால்… அடுத்த அணியிலோ அரம்பம் அபாரம் … அப்புறம் அவுட் என்கிற ரீதியில் சுறுசுறுப்பாய் கூட்டணி அறிவிப்பு… பின்பு காங்கிரசுக்காய் காத்தி ருப்பு… பிறகு ச்சீ… ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி பேரம்.
இவர்களுக்கு, நடுவில் குட்டிக் குட்டியாய் சாதிப் கட்சிகள்… திடீர் சங்கங்கள்… .நடிகர்களின் அதிரடி அரசியல் ஆர்ப்பாட்டங்கள் … எல் லாம் நாங்களும் வருவோம்ல. என்று இரண்டு அணிகளை யும் கவர்வதற்காக கரகமாடிக்கொண்டுள்ளன• ஆக, தேர்தல் களம் சுவாரஸ்யம் மிகுந்த கூட்டணிக் கூத்தாகி யிருக்கிறது.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று நாமும் வேடிக்கைப் பார்த்தால், எப்படி? ஆட்சியைப் பிடிக்க இப்படி அலைகிறீர்களே.. ரூம் போட்டு யோசிக்கிறீங்களே… மக்கள் நலனுக்காக என்றைக் காவது, இப்படி கூடிப் பேசி இருக்கீங்களா? என்று இவர்கள் காது கிழிய கேட்க வேண்டாமா?
கேட்பதோடு நிற்காமல், கட்சிக்கும் காசுக்கும் மயங்காமல்… இலவச த்துக்கும் சலுகைக்கும் சோரம் போகாமல் …. நமக் கல்ல•.. நாட்டுக்கு யார் தேவை? என்பதை இப்போதிருந்த தேடுங்கள்….
உரத்த சிந்தனையுடன் கூடிய இந்த தேடல் மாத்திரமே இந்தத் தேர்தலில் நாமும்… நாடும் தேற ஒரே வழி!