Saturday, July 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு: “பனங்கற்கண்டு தேங்காய் சுசியம்’

“பனங்கற்கண்டு தேங்காய் சுசியம்’ செய்ய கற்றுத் தருகிறார், மதுரை பார்சூன் பாண்டியன் ஓட்டல் சமையல் நிபுணர் உன்னி கிருஷ்ணன்.

சமையல் நேரம்: 20 நிமிடங்கள்

தேவையானவை :
இட்லி மாவு – ஒரு கப்
மைதா மாவு-ஒரு கரண்டி அளவு
சோடா உப்பு – இரண்டு சிட்டிகை
பனங்கற்கண்டு – 100 கிராம்
தேங்காய் துருவல் – ஒரு கப்
ஏலக்காய் பொடி – சிறிதளவு
முந்திரிபருப்பு -ஒரு டேபிள் ஸ்பூன்
பிஸ்தா – ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
உடைத்த கடலை – கால் கப்
எண்ணெய் – பொரிப்பதற்கு
இளமஞ்சள் நிற உணவுக்கான பொடி – சிறிதளவு

செய்முறை:
இட்லி மாவு, மைதா, சோடா உப்பை சேர்த்து தோசை மாவு பதத் திற்கு கரைக்க வேண்டும். வாணலியில் நெய் ஊற்றி தேங்காய் துருவல், முந்திரி பருப்பு, பிஸ்தா, ஏலக்காய் பொடி, பனங்கற் கண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.இதனுடன் உடைத்த கடலை மாவை சேர்த்து நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண் டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிட வேண்டும். கரை த்து வைத்த மாவில் உருண்டைகளை நனைத்தெடுத்து, பொன் னிறமாக பொரித்தெடுக்கவும். தீயை மிதமாக வைத்தால் சுவை கூடும்.

படித்ததை ருசித்து படைத்தோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: