இரவில் தூக்கம் வராமல் துக்கப்படுபவர்கள் நிறைய. அவர்கள் சில ஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும். தூக் கம் அவர்களை அன் போடு அரவணைத்துக் கொள் ளும்…
டி.வி.யை அணையுங்கள்
உங் களுக்கு தினசரி படுப்ப தற்கு முன் டி.வி. சேனல் களில் உலா வுவதும், இணை யத்தில் மேய்வதும் வழக்க மாக இருக் கலாம். ஆனால் இது நிச்சய மாக தூக்கத்தைப் பாதிக்கும். நீங்கள் வெட்டியாக நேரத்தைக் கொன்று, கண்களை சோர்வுறச் செய்கிறீர்கள். நீங்கள் டி.வி. அல்லது கம்ப்ïட்டர் மானிட்டர் முன் உட்கார்ந்திருக்கும் போது, அது உங்கள் மூளை யைத் தூண்டி தூக்கத்தைத் துரத்திவிடுகிறது.
உடற்பயிற்சியே உற்ற தோழன்
தூக்கத்துக்கு உற்ற தோழன், உடற்பயிற்சி. உடற்பயிற்சியின் பல பயன்களுள் ஒன்று, நல்ல ஆழ்ந்த உறக்கம். உடற்பயிற்சி நேரம், காலை அல்லது பிற்பகல் வேளையாக இருக்க வேண்டும்.
தினசரி ஒரு முறைப்படுத்தப்பட்ட உடற்பயிற்சிகளை மேற் கொள் வோர், இரவில் நன்றாகத் தூங்குகின்றனர் என்று தெரிவிக் கிறது ஓர் ஆய்வு. ஆனால் படுக் கைக்குப் போகும் முன் செய்யும் உடற்பயிற்சியால் பலன் ஒன்றும் இல்லை.
சாப்பாட்டில் சரியாக இருங்கள்
படுக்கப் போகும்முன் பால் பருகும் ரொம்பப் `பழைய’ பழக்கம் உங்கள் வீட்டில் வழக்கமாக இருக்கிறதா? அது அர்த்தமற்றது இல்லை. சில உணவுப் பொருட்களுக்கு தூக்கத்தைத் தூண்டும் தன்மை உண்டு. உதாரணமாக, வாழைப்பழம், முழுக் கோதுமை யில் தயாரித்த `பிரெட்’ போன்றவை. அதே நேரம் பகலிலும் கண் சொக்குகிறதே என்பவர்கள், பகல் வேளையில் இந்த உணவு களைச் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
அலாரம் அலற வேண்டாம்
நல்ல சுகமான உறக்கத்தில் இருக்கிறீர்கள். அப்போது அலாரம் அலறுகிறது. திடுக்கிட்டு விழித்தெழுந்து, படுக்கையை விட்டு வெறுப்போடு நகர்கிறீர்கள். இது நல்லதல்ல என்கிறார்கள். அன்றைய நாள் முழுவதையும் தூக்கக் கலக்கமான நிலையிலும், கடு மையான தலைவலியிலும் கழிக்க நேரலாம்.
அலார ஒலி குறைவாக இருந்தாலே போதும். வேண்டும் என்றால் நíங்கள் இரட்டை அலார நேர முறையைக் கடைப்பிடிக்கலாம். அதாவது, இரண்டு கடிகாரங்களில் அலாரம் செட் செய்துவிட வேண்டும்.
அதாவது, முதல் கடிகாரத்தில் மென்மையாக ஒலி எழும்பும் படியும், இரண்டு நிமிடங்களில் ஒலிக்கும் அடுத்த கடிகாரத்தில் சற்றுப் பலமாக ஒலி எழும்பும்படியும் வைக்கலாம். இதனால் நீங்கள் படுக் கையிலி ருந்து அலறி அடித்துக்கொண்டு எழ மாட்டீ ர்கள். அதேநேரம், அலார ஒலிக்குத் தப்பி நீங்கள் தூங்கிவிடவும் மாட்டீர்கள்.
மனம் அமைதி பெறட்டும்
வாழ்க்கையில் வெறுப்பு ஏற்படுத்தும் விஷயங்களில் ஒன்று, படுக்கையில் படுத்துக் கொண்டு தூக்கம் எப்போது வரும் என்று தவிப் பது. தூக்கம் வராமல் நேரமாக ஆக, வெறுப்பும் கூடும். உங்கள் மூளை ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி அலசிக் கொண்டு `ஆக்டிவாக’ இருப்பதுதான் இதற்குக் காரணம். மனதை அமைதியாக வைத்துக் கொள்வதும், அறிந்திருந்தால் மூச்சுப் பயிற்சி செய்வதும், தியானம் போன்ற நிலையில் ஈடு படுவதும் தூக்கத்தை அழைத்து வரும்
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்