Friday, December 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நிறத்தை வைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்க…

நிறத்தைவைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்’ – இது தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட். ‘உங்களுக்குப் பிடித்த கலரைச் சொல்லுங்கள். உங்களைப்n பற்றிச் சொல்லுகிறோம்’ என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள்.

தோ அவர்களின் கலர்ஃ புல் ஜோ திடம்… வெள்ளை: நீங்கள் இள மை விரும்பிகள். எதிலும் பெர்ஃ பெக்ஷனை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக் கால்விடும் கல்லுளிம ங்கன்ஸ்.

அதனால், சீக்கிரம் ஏமாறமாட்டீர்கள். பிடிக்கும் என்பத ற்காக அடிக்கடி வெள்ளை ஆடைகளை அணியாதீர்கள். ஏனெனில், மழை பெய்து ஊரே சகதியாகக் கிடக்கிறது!
சிவப்பு: ரொம்பவே ஆக்டிவ் பார்ட்டி. நத்தை கூட மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர வேண் டும் என்று ஆசைப்படுவீர்கள். இந்த கலர் பிடித் த ஆண்களுக்கு ஒரே மாதிரியான வாழ் க்கை என்றா லே கசப்பு. (மனைவிகள் கவனி க்க!) அதிக மனவலிமை இருக்கும். அதுதான் பல மும் பலவீனமும்!
பிங்க்: சிவப்பின் மென்மைக் குணமே பிங்க். சரியான சுயநலச் சுனாமிகள். எப்போதும் தன்னை யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதற் காகப் பசித்த பூனை போலப் பரிதாப முகம் காட்டி நடிப்பீர்கள் (காதலிகள் உஷார்!).
மெரூன்: மெரூன் என்றால்மெச்சூ ரிட்டி என்று அர்த்தம். வாழ்க் கையில் அடிபட்டு, படிக்கட்டில் ஏறி வந்தவர்களுக்கு மெரூன் பிடிக்கும். தனக்கு உதவி கிடைக்காததால், சுற்றி இருப்பவர் களுக்கு உதவி செய்வார்கள். ஸோ… மெரூன் பார்ட்டிக ளுக்கு உடனடியாக ஃபேஸ்புக்கில் ஒரு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுங் கள்!

ஆரஞ்சு: சுகவாசிகள். ஆல் டைம் ஹேப்பி வேண்டும். கூட்டணி கவர்ன்மென்ட் மாதிரி எப்போதும் நிலை இல்லாமல் அலை வீர்கள்! மஞ்சள்: புத்திசாலித்தனம், கற்பனை வளம் இருந்தால், உங்களுக்கு மஞ்சள் பிடிக்கும். ஒசாமா கூட இருந்தாலும் உங்களுக்குச்சிரிப்பு வரும். அவரையும் சிரிக்கவைப்பீர்கள். உங்களுக்கு முதல் தேவை முழுச் சுதந்திரம்!

பச்சை: மென்மை பிளஸ் நேர்மைதான் பச்சை பார்ட்டிகள். உங்க ளைச் சுற்றி எப்போதும் 10 பேர் இருக்க வேண்டும். அன்பே உங் கள் ஆயுதம். அமைதி உங்கள் சாய்ஸ். இதனாலேயே சுற்றியுள்ள மாப்புகள் உங்க ளுக்கு ரெகுலராக ஆப்புகள் வைப்பார்கள். பி அலர்ட்!

கறுப்பு: கிவ் ரெஸ்பெக்ட்… ஹேவ் ரெஸ்பெக்ட் பார்ட்டிகள். ஈஸி யாக மற்றவர்களை இம்ப்ரெஸ் செய்துவிடுவீர்கள். மரியாதை என்பது மரணம் மாதிரி. நீங்கள் விரும்பாவிட்டாலும் தேடி வந்து விடும்!

லேவண்டர்: கொஞ்சம் கலாசாரக் காவலர் கள். புதுமை பிடிக் காது. கட்டம் போட்ட பேன்ட் பார்த்தால் சத்தம் போட்டு அலறுவீர் கள். உள்ளுவது உயர்வுள்ளல். ஆனால், வேலை வந்துவிட்டால், குறட்டைவிடு வீர்கள். வாழ்க்கை முழுக்க ஒரே கலர் பிடிக் காதே… மாறிக்கொண்டே இருக்கிறது என்கிறீர்களா? கலருக்குத் தகுந்த மாதிரி உங்கள் கேரக்டரும் அந்தந்த நேரம் மாறியிரு க்கும்!
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

One Comment

Leave a Reply