Saturday, July 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எந்த நாட்டுப் பெண் எப்படி?

ஒரு சீனப்பெண்ணை நம்மால் பார்த்தவுடன் கண்டுபிடித்து விட முடியும். இடுங்கிய கண்கள், சப்பை மூக்கு, இளமஞ்சள் தேகம் என்றிருப்பார். ஆனால் சீனப் பெண்ணையும், நம் நாட்டின் வட கிழக்கு பகுதியையே சேர்ந்த பெண்ணையும் நம் மால் இனம் பிரித்து அறிய முடியாது.

ஆசியப் பெண் எப்படியி ருப்பார், ஆப்பிரிக்கப் பெண் எப்படியிருப்பார், ஐரோப் பியக் கண்டப் பெண் எப் படித் தோற்ற மளிப்பார் என்று பொதுவாகத்தான் நம்மால் கூற முடியும். முதல் முறையாக, ஒவ்வொரு நாட்டுப் பெண்ணும் எப்படியிருப்பார் என்பதை கணினி முறையில் உருவாக்கி யுள்ளார், ஒரு புகைப் படக்காரர். இங்குள்ள பெண்களின் படங் களைப் பாருங்கள். இந்த முகங் களின் பின்னணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் அம்சங்கள் இணைந்திருக்கின்றன.

 

இவற்றை உருவாக்கியவர், தென் ஆப்பிரிக்கப் புகைப்படக்காரர் மைக். துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் வசிக்கும் மைக் குக்கு, பல்வேறு இனப் பெண்களின் முகங்களில் ஆர்வம். அத னால், `நாளைய முகம்’ என்ற புராஜெக்டை தொடங்கினார். தான் காணும் பெண்களை எல்லாம் அவர்களின் அனுமதி பெற்று புகை ப்படம் எடுத்துத் தள்ளினார். மறக்காமல், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தையும் கேட்டுக் குறித் துக் கொள்வார்.

ஒரு நாட்டுக்கு நூறு முகங்கள் சேர்ந்ததும், அதிநவீன மென் பொருள் கொண்டு அந்தப் பெண்களின் அம்சங்களை நுணுக் கமாகக் கோர்த் தெடுத்து ஒரே படமாக ஆக்கிவிடுவார். இவ்வாறு பல ஆண்டுகால உழைப்புக்குப் பின் ஒரு தொகுப்பை உருவாக் கியிருக்கிறார் மைக். அதில் தங்கள் நாட்டுப் பெண் முகத்தைப் பார்ப்பவர்கள், `அப்படியே எங்க ஊர் பெண் மாதிரி இருக்கிறார்!’ என்று சிலிர்க்கிறார்கள். (நீங்களும்கூட இந்திய, தென்னிந்தியப் பெண்களின் முகங்களைப் பார்த்து சரிதானா என்று தெரிந்து கொள்ளலாம்.)

மைக் தனது படத்தொகுப்பை வெளியி ட்டிருக்கும் அவரது இணைய தளம் மிகவும் பிரபலமாகிவிட்டது. லண்ட னில் ஒருநாள் பாதாள ரெயிலில் பயணி த்துக் கொண்டிருக்கும் போதுதான் மைக் குக்கு இந்த யோசனை தோன்றியதாம்.

நான் ரெயிலில் அமர்ந்திருந்தபோது, அமெ ரிக்கப் பெண்கள், இந்தியப் பெண் கள், ஜிம்பாப்வே, சோமாலிய, ஸ்கா ண்டி நேவிய என்று பலநாட்டுப் பெண்க ளைப் பார்த்தேன். `என்னடா இது? உண் மையில் ஒரு லண்டன் பெண் எப்படி த்தான் இருப்பார்?’ என்ற ஆர்வம் என க்கு ஏற் பட்டது. அதன் அடிப்படையில்தான் நான் பெண் களைப் பற்றிய தேடலைத் தொடங்கினேன்” என்கிறார் மைக். எல்லாப் பெண்களுக்கும் இடையே ஓர் அடிப்படையான தொடர்பு இருப் பதையும் தன்னால் உணர முடிகிறது என்கிறார் இவர்.

 

ஒவ்வொரு நாட்டுப் பெண்ணும் சரா சரியாக எப்படி இருப்பார் என்ற கருத் தின் அடிப்படையில் இந்தப் படங் களை உருவாக்கியிருக்கிறார் மைக். அதனால், வெளிநாட்டுப் பெண்களில் வெள்ளை அல்லது பொன்னிற முடி கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்ற போதும், `சராசரி’ என்று வருகிற போது கறுப்பு முடியாகி இருக்கிறது. உலகின் பெரும்பாலான நாட்டுப் பெண்கள் கருங்கூந்தல் அழகிகள் தான்.

“ஐஸ்லாந்து பெண்கள்தான் முழுக்க முழுக்க பொன்னிறக் கூந்தல் கொண்டவர்கள்” என்கிறார், 47 வயது மைக்.

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply