Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கம்ப்யூட்டருக்குப் புதியவரா! யூசர் இன்டர்பேஸ்

யூசர் இன்டர்பேஸ் என்ற சொல் தொடரை அடிக்கடி இந்த பக்கத்தில் எழுதப்படுகின்ற குறிப்புகளிலும் கம்ப்யூட்டர் தொடர் பான நூல்களிலும் படித்தி ருப்பீர்கள். ஆனால் அது சரி யாக எதனைக் குறிக் கிறது என்று ஒரு நேரமும் நாம் கவனம் செலுத்தியதில் லை. இதன் பின்னணியில் என்ன உள்ளது என்றும் எண்ணியதில் லை. கம்ப்யூ ட்டரில் ஒவ் வொரு முறை நீங்கள், கம்ப்யூட்டர் பயன்ப டுத்து பவர், புதிய புரோகி ராம் ஒன்றைப் பயன்படு த்தும் போது யூசர் இன்டர்பேஸ் ஒன்றைப் பயன்படுத்துகிறீர்கள். அடிப் படை யில் ஒரு புரோகிராமோடு அல்லது கம்ப்யூட்டரில் இணை க்கப்பட்ட சாதனத்தோடு உங்களை இணை க்கும் வேலை யை அறிமுக அடிப்படையில் செயல்படுவதே யூசர் இன்டர் பேஸின் வேலை. அந்த புரோகிராமுடன் வரும் சிறிய கண்ட் ரோல்கள் (எ.கா. மெனு, லிங்க், பட்டன், பைல், சவுண்ட் போன் றவை) அனைத்தும் இந்த யூசர் இன்டர்பேஸில் தான் காட்டப்படுகின்றன. ஒரு புதிய புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் உங்க ளுக்குக் கிடைக்கும் முதல் திரை ஒரு யூசர் இன்டர்பேஸ். அல் லது புதிய ஹார்வேர் சாதனம் ஒன்றை நீங்கள் கம்ப்யூட்டரில் இணைத்தால் கிடைக்கும் முதல் திரை ஒரு யூசர் இன்டர்பேஸ் ஆகும். அந்த புரோகிராம் உள்ளே செல்ல உங்க ளுக்கு ஒரு லைட்ஹவுஸ் போல செயல்படுவதே யூசர் இன்டர் பேஸ்.

பெரும்பாலும் அனைத்து புரோகிராம்களும் எளிய பயன்படுத்த இலகுவான இன்டர்பேஸையே அளிக்கின்றன. அதனை பயன் படு த்துவது எளிதாக இருப்பின் அதுவே அதனுடைய சிறப்பு தன்மை ஆகும். இன்டர்பேஸ்களில் பல வகை உண்டு. கிராபிகல் இன்டர் பேஸ், வெப் அடிப்படி யிலான இன்டர்பேஸ், கட்டளை வரிகளில் செயல்படும் இன்டர்பேஸ் போன்ற வகைகளை எடுத் துக்காட்டு க்களாகக் கூறலாம். இது எத்தகைய புரோகி ராமுடன் நீங்கள் செயல்படுகிறீர்கள் என்பதனைப் பொறுத்து மாறும். புதிய புரோகிராம் ஒன்றின் இன்டர்பேஸுடன் பழக சில நாட்கள் ஆகும். அது நீங்கள் அந்த புரோகிராமினைப் பயன் படுத்தும் நேரம் மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்தது ஆகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: