Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பட்ஜெட் அகாய் போன்

மொபைல் போன் விற்பனையில் நல்ல இடத்தைப் பிடிக்க முயற்சிகளை எடுத்து வரும் அகாய் நிறுவனம், அண் மையில் அகாய் நிஞ்சா ப்ளஸ் என்ற பார் டைப் மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள் ளது. இரண்டு பேண்ட் அலை வரி சையில் இயங்கும் இந்த போன், 1.8 அங்குல வண்ணத்திரையைக் கொண்டுள்ளது. இதன் அட்ரஸ் புக்கில் 500 முகவரிகளைத் தேக்கி வைக்கலாம். இதன் மெமரி ஸ்லாட் மூலம், நினைவகத்தின் திறனை 2 ஜிபி வரை உயர்த்தலாம். இரண்டு சிம் இயக்க போனாக வடிவமைக்கப் பட்டுள்ள இந்த மாடல் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. இதில் கேமரா தரப்பட வில்லை. எஸ்.எம்.எஸ். அனுப்பிப் பெறலாம். எம்.பி.3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ இயங்குகின்றன. எல்.இ.டி. டார்ச் ஒன்று இணைக்கப் பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,250 எனக் குறிக்கப்பட்டுள்ளது.

வீடியோகான் மியூசிக் போன்
பல்வேறு மாடல்களில் போன் களையும், சேவைக் கட்டணத் திட்டங்களையும் கொண்டு, மொபைல் மார்க்கட்டைக் கலக்கி வரும் வீடியோகான் நிறுவனம், அண்மையில் இசைப் பிரியர் களுக்கான பட்ஜெட் போன் ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. வி 1425 க்யூ. ஆர். யு.எஸ்., என அழைக்கப்படும் இந்த போன், இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களில் இயங்கும். இதன் அதிக பட்ச மியூசிக் அவுட்புட் 100 மெகா வாட் என்பது இதன் சிறப்பு. இதன் பேட்டரி 1200 எம்.ஏ.எச். திறன் கொண்டது. இதனால், 480 மணி நேரம் பேசும் திறனை அளிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், பத்து நாட்கள் தாக்குப் பிடிக்கிறது.

இதன் அட்ரஸ் புக் 1000 முகவரிகளைக் கொள்கிறது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் மூலம் மெமரி யினை 4 ஜிபி வரை உயர்த் தலாம். கருப்பு வண்ணத்தில் பார் டைப் போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வி.ஜி.ஏ. கேமரா தரப்பட் டுள்ளது. வீடியோ இயக்கமும் உண்டு. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்ப முடியும். எம்.பி.3 பிளேயர் மற்றும் ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ உள்ளது. அசைத்து இயக்கும் ஷேக் சென்சார் இயங்குகிறது. இதன் பரிமாணம் 108 x 47.5 x 17.5 மிமீ . இதன் அதிக பட்ச விலை ரூ.2,308 மட்டுமே.

ஜனவரியில் 1.37 கோடி ஜி.எஸ்.எம். இணைப்பு
சென்ற ஜனவரி மாதம், ஜி.எஸ்.எம். மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்கள், ஒரு கோடியே 37 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கி யுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதி ஏர்டெல் 33 லட்சம், வோடபோன் எஸ்ஸார் 31 லட்சம், பி.எஸ்.என்.எல். 22 லட்சம், ஐடியா செல்லுலர் 25 லட்சம் இணைப்புகளைத் தந்து ள்ளன.

ஜி.எஸ். எம். சேவை தருவதில் பாரதி ஏர்டெல் நிறுவனம் ஒரு கோடியே 55 லட்சம் சந்தாதாரர்களுடன் முதல் இடத்தில் உள் ளது. வோடபோன் நிறுவனத்திடம் 12 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர். புதிய நிறுவனங்களில், யூனிநார் 17.9 லட்சம் பேருக்கு புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. மொத்தம் 2கோடி சந்தா தாரர்களைக் கொண்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: