Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வை-பி & 3ஜி வசதி போன்கள்

மொபைல் போன் சந்தையில், உயர்நிலை ஸ்மார்ட் போன் களுக்கு எப்போதும் பஞ்சமில்லை. ஆனால் நாம் குறிப்பிட்ட சில வசதிகளை முன்னிறுத்தித் தேடினால், அவை கொண்ட போன் கள் நமக்குக் கிடைப்பது அரிதாகவே இருக்கின் றன. அண் மையில் நம் வாசக ர்களில் சிலர், வை-பி மற்றும் 3ஜி வசதி கொண்ட போன்கள் சந் தையில் அதிகம் உள்ள னவா? அவற்றில் குறிப்பி ட்ட விலைக் குள்ளாக அடங்கும் வகையில் எவை உள்ளன என்று கேட் டிருந்தனர். இந்த வசதிகள் கொண்ட போன் களாகத் தேடியதில், நம் பாக்கெட்டை அதிகம் கடிக்காத போன் களாகச் சில தோன்றின. அவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்.

1.மைக்ரோமாக்ஸ் ஏ 60 (Micromax A 60): ஆண்ட்ராய்ட் சிஸ் டத்தில் இயங்கும், விலை குறைந்த ஸ்மார்ட் போனாக, மைக் ரோமாக்ஸ் ஏ 60 உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.6,500. இதில் வேகமாக டைப் செய் திட ஸ்வைப் கீ போர்டுள்ளது. இதில் டைப் செய்வதனை டைப்பிங் என்று சொல்லாமல், ஸ் வைப் பிங் என்று சொல் லும் அளவிற்கு தனித் தன் மை உடை யதாக உள்ளது. இது போதாது என்று, கையில் எழுதுவதனைப் புரிந்து டெக்ஸ்ட்டாக மாற் றும் வசதி யும் உள்ளது. இதில் 600 மெஹா ஹெர் ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. 2.8 அங் குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம், ஜி.பி.எஸ்., A2DP இணைந்த புளுடூத், 3 மெகா பிக்ஸெல் கேமரா, 32 ஜிபி வரை நினைவகத்தினை அதிகப்படுத்தும் வசதி கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன.

2.ஹுவேய் யு8 150 ஐடியோஸ் (Huawei U8 IDEOS): ஹூவேய் நிறுவனத்தின் மொபைல் போன்கள், அண்மைக் காலமாக இந்திய மொபைல் சந்தையில் சத்தம் எழுப்பி வருகின்றன. இந்த மொபைல் மாடலில் ஆண்ட்ராய்ட் ப்ரையோ 2.2 சிஸ்டம் பயன்படுத்தப் படுகிறது. கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கும் ஆண்ட்ராய்ட் ப்ரையோ சிஸ்டம் கொண்ட போன் இதுவாகும். இதில் பிளாஷ் சப்போர்ட் தரப்பட்டுள் ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் 2.8 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., 3ஜி, வை-பி, ஆகிய தொழில் நுட்ப வசதிகள் தரப்பட்டுள் ளன. A2DP இணைந்த புளுடூத், 3 மெகா பிக்ஸெல் திறன் கொண் ட ஆட்டோ போகஸ் கேமரா, ஜியோ டேக்கிங், எப்.எம். ரேடியோ, 32 ஜிபி வரை நினைவகத்தினை அதிகப்படுத்தும் வசதி கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 3.5 மிமீ ஆடியோ ஹேண்ட்ஸ் பிரீ ஜாக்கெட் ஆகியவை உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.8,499.

3.எல்.ஜி. ஜி.டி.540: எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஆப்டிமஸ் வரிசையில் முதல் போன் இது. ஆண்ட்ராய் 2.1 சிஸ்டத்தில் இயங்குகிறது. ப்ராசசர் 600 மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்டது. 3 அங்குல டி.எப்.டி. ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., 3ஜி, வை-பி, ஆகிய தொழில் நுட்ப வசதிகள், ஜி.பி. எஸ். சப்போர்ட், A2DP இணைந்த புளுடூத்,3.5 மிமீ ஆடியோ ஹேண்ட்ஸ் பிரீ ஜாக்கெட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.10,900.

4. சாம்சங் வேவ் எஸ் 7233 இ: இந்நிறுவனத்தின் படா (BADA) ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், அண்மைக் காலத்தில் வந்திருக்கும் ஸ்மார்ட் போன் இது. அதே போல இந்நிறுவனத்தின் டச்விஸ் இன்டர்பேஸ் பதியப்பட்டு இயங்குகிறது. அதிகமான எண்ணிக்கை யில் விட்ஜெட்டுகள் மற்றும் அப்ளிகேஷன்களை இதில் பதிந்து இயக்க முடிகிறது. ஒரே திரையின் மூலம், பலவித சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கு இணைப்பு கிடைக்கிறது. படங்களை அனைத்திற்கும் அப்லோட் செய்திட முடிகிறது. சாம்சங் நிறுவனத்தின் அப்ளிகேஷன் ஸ்டோரில், பலவித தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன.
இந்த போனில், 3.2 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., 3ஜி, வை-பி, ஆகிய தொழில் நுட்ப வசதிகள், ஜி.பி. எஸ். சப்போர்ட், A2DP இணைந்த புளுடூத், 3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, ஜியோ டேக்கிங் வசதி,ரெகார்டிங் வசதி கொண்ட ரெகார்டர், 16 ஜிபி வரை நினைவகத்தினை அதிகப்படுத்தும் வசதி கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஆடியோ ஹேண்ட்ஸ் பிரீ ஜாக்கெட் ஆகியவை கிடைக்கின்றன. இதன் அதிக பட்ச விலை ரூ. 10,500.

5. நோக்கியா இ 5: பிளாக் பெரி அல்லாத ஸ்மார்ட் போன்களைத் தேடுபவர்களிடம் நோக்கியா இ 5 அதிகமாக விரும்பப் படுகிறது. சிம்பியன் வரிசை 60 யில் இது இயங்குகிறது. லேட்டஸ்ட் யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. மற்ற எந்த போனிலும் இல்லாத வகையில் குவெர்ட்டி கீ போர்டு எளிதாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோக்கியா ஓவி மேப்ஸ் கொண்ட ஜி.பி.எஸ். தரப்படுகிறது. 2.3 அங்குல டி.எப்.டி. திரை, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., 3ஜி, வை-பி, ஆகிய தொழில் நுட்ப வசதிகள், A2DP இணைந்த புளுடூத், 5மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, ஜியோ டேக்கிங் வசதி, எப்.எம். ரேடியோ, 32 ஜிபி வரை நினைவகத்தினை அதிகப்படுத்தும் வசதி கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஆடியோ ஹேண்ட்ஸ் பிரீ ஜாக்கெட் ஆகியவை இதன் மற்ற சிறப்பம் சங்களாகும். இதன் அதிக பட்ச விலை ரூ. 10,599

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: