Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆங்கிலச் சொல்லறிவு விளையாட்டு

உங்கள் குழந்தையின், ஏன் உங்களுடையதும் கூட, ஆங்கிலச் சொல்லறிவினை வளப் படுத்த உங்களுக்கு விருப்பமா? எதற்கு இந்த கேள்வி? யார் தான் விரும்ப மாட்டா ர்கள் என்று எண்ணு கிறீர்களா? சரி, விஷயத்திற்கு வருவோம். ஆங் கிலச் சொற்களை அதிகம் தெரிந்து கொள்ளவும், நமக்குத் தெரி ந்ததைச் சோதித்து அறிந்து கொள்ளவும், அருமையான ஓர் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது, இதன் முகவரி http://vocabgenii.com. இந்த தளத்தில் நுழைந்து முதலில் உங்க ளைப் பதிந்து கொள்ளுங்கள். உங்கள் பெயர், மின்னஞ்சல் முக வரி கொடுத்துப் பின்னர் பாஸ்வேர் ட் எல்லாம் கொடுத்த பின்னர், இதில் விளையாடத்தொடங்கலாம். விளையாடுவதற்கு முன்னர், உங் கள் லெவல் என்ன வென இந்த தளத்திற்குக் கொடுக்க வேண்டும். பின் னர் விளை யாடத் தொடங்கலாம். இதில் பல சுற்றுகள் உண்டு. ஒவ்வொரு சுற்றிலும் ஆங்கிலச் சொற்களின் எழுத்து க்கள் மாற்றிக் கொடு க்கப்படும். குறிப்பிட்ட சொல்லுக்கான பொரு ளும் விளக்கமும் தரப்பட்டிருக்கும். அதனைக் கொண்டு, சொல்லைக் கண்டு பிடித்து, முதல் எழுத்திலிருந்து வரிசையாகக் கிளிக் செய்திட வேண்டும். சொல் முழுவதும் கிளிக் செய்து விட்டால், சரி/தவறு எனச் சுட்டிக் காட்டப் பட்டுப் பின் அடுத்த சொல் காட்டப்படும். இப்படியே முதல் சுற்று, இரண்டாம் சுற்று எனச்சென்று, இறுதி யில் நீங்கள் பெற்ற மதிப்பெண் காட்ட ப்படும்.

இதனால், நாம் ஒரு அகராதியைப் புரட்டிப் பார்த்த அனுபவத் தினைப் பெறுகிறோம். பல புதிய சொற்களை அறியும் வாய்ப்பு களையும் பெறு கிறோம். நம் ஆங்கிலச் சொல்வளம் பெருகிறது

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: