Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எரிமலையைப் பற்றிய திகிலூட்டும் பல உண்மைகள்! (செய்தி & வீடியோ)

உலகிலேயே, எரிமலைப் பாறை பியூமீஸ் என்னும் பாறை மட்டுமே தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது. வெளிர் வெண்மை நிறத்தில் இருக்கும் இந்த பாறைகள், எரி மலை யின்போது வெடி த்துச் சிதறி பின்பு குளிரும் பாறைகளி லிருந்து பல வாயுக்கள் வெளியாவதால் ஏற்படும் ஓட்டை களைக் கொண்டது!

ஹாவாயின் மாவ்னா லோவா (Mauna loa) எரிமலை!

உலகிலேயே மிக பயங்கரமான எரிமலைகள் சூப்பர் எரிமலைகள் எனப்படுகின்றன! இவை வெடித்துச் சிதறும் போது, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் தீமழை பொழி வதோடு, உலகளாவிய பருவநிலை (தட்ப வெட்ப) மாற்றங்களையும் உருவாக்கும் தன்மை கொண்ட வை யாம். இவ்வெரிமலைகள், சில லட்ச வருடங் களுக்கு ஒரு முறைதான் வெடிக்குமாம். யப்பா….. தப்பிச் சோம்டா சாமீ….?! இத்தகைய ஒரு எரிமலை, அமெரிக்காவின் யெல் லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் இருக்கிறதாம். இது வெடிப்பதற்க்கு நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது என்கிறா ர்கள் விஞ்ஞானிகள். ஐய்யய்யோ…..!!

லாவா குழம்பைக் கக்கும் எர்மலையின் தத்ரூபமான டை லாப்ஸ் காணொளி!

உலகின் மிகப்பெரிய எரிமலை, இந்தோனேஷியாவின் சும்பாவா (Sumbava) தீவில் உள்ள, டாம்போரா(Tambora) மலையில்தான் வெடித்ததாம். 1815 ஆம் ஆண்டு வெடித்துச் சிதறிய இந்த எரி மலைக்கு, ஒரு லட்சம் மக்கள் பலியானா ர்களாம்! உலகின் மிகப் பெரிய எரிமலைகள், இந்தோ னேஷியாவில் சுமார் 76 இருக் கின்றன என்கிறது அமெரிக்காவின் ஒருஆய்வு!

உலகின் மிகப்பெரிய 10 எர்மலைகளின் தொகுப்பு

பெரும்பாலான எரிமலைகள், பூமியின் மேற்புறத்தின் விளிம் புகளில்தான் ஏற்படுகின்றனவாம். ஆனால், சூப்பர் எரிமலைகள் பூமியின் ஆழ்பகுதிகளில் தீக்குழம்புகளுடன் மறைந்திருக் கின்றனவாம். அப்படியா சங்கதி….?!

உலகின் தீ-பனிக்கட்டி நாடு என்றழைக்கப்படும் ஐஸ்லாந்து நாடு, எரிமலைகளின் மேலேதான் உட்கார்ந்து இருக்கி றதாம்?!.  2010 ஏப்ரலில் ஏற்பட்ட Eyjafjallajokull volcano என்னும் எரிமலை, 1783 ஆம் ஆண்டின் ஸ்கப்டார் (Skaptar) மலையில் ஏற்பட்டு, ஐஸ்லாந்து நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு மக்களையும், விளைநிலம் மற்றும் மீன்பிடி குளங்க ளையும், காவு வாங்கிய எரிமைலையைவிட அளவில் சற்றே சிறியதாம்!

கடந்த 1991 ஆம் ஆண்டு, பிலிப்பின்ஸ் நாட்டின், பினாடூபோ (Pinatubo) மலையில் வெடித்துச் சிதறிய எரிமலை, 22 மில்லியன் டன் சல்ஃபர் டை ஆக்சைடு என்னும் வேதிப் பொரு ளை (அமிலம்) கக்கியதோடு, உலகின் வெப்ப நிலைவயில் 0.5 டிகிரி செல்சியஸ் அளவிற்க்கு குறைத்து விட்டதாம்?! அடேங் கப்பா….!!

எரிமலைகள் வளரும் தன்மையுடையனவாம்! லாவா குழம்பும், சாம்பலும் சேர சேர, எரிமலைகளுக்கு அவை, பல்வேறு படிமங் களையும், உயரத்தையும் ஏற்படுத்தி விடுமாம். இப்படித்தான் பல மலைகளும் உருவாகின்றன என்கிறது அறிவியல் ஆய்வு!

எரிமலைகள் முற்றிலும் அழிந்தும் போகக்கூடிய தன்மை உடையவையாம்!

எரிமலைகளின் சக்தியானது, மாக்மா (Magma) குழம்பு களை ஒரு மிகப் பெரிய கிண்ணம் போன்ற வடிவத்தில் உருவாக்கிவிடும் தன்மை கொண்டவையாம். இவற்றை கால்டெரா (Caldera) என்கி றார்கள் ஆங்கிலத்தில்!

உலகின் மிகப்பெரிய எரிமலையானது ஹவாயின் “மாய்னா லோவா (Mauna Loa)” தானாம். ஹாவாயின் 5 எரிமலைகளுக் குள் ஒன்றான இது, கடல் அளவிலிருந்து 13,000 அடி உயரத்தில் இருக்கிறதாம். ஹவாய் தீவுகளே இத்தகைய எரிமலைகளால் உருவானவைதானாம்!

எரிமலைகள், சூரியன் மறைவை மிக வண்ண மயமாக்கிவிடு மாம்! கடந்த 2008 ஆம் ஆண்டு, அலாஸ்காவின், காசா டோச்சி (Kasatochi) எரிமலை வெடித்துச் சிதறியபோது, உலக மக்கள் அனைவரும் வித்தியாசமான, அசாதாரணமான அழகுடன் ஆர ஞ்சு வண்ண சூரியன் மறைவை காண முடிந்ததாம். இம்மாதிரி யான நிகழ்வு, எரி மலை யின் சாம்பல்கள் சூரியக் கதிர்களுடன் இணையும்போது ஏற்படுபவையாம்!

இதுவரைக்கும் எரிமலைகள் பத்தி படிக்கத்தான செஞ்சீங்க, அத னால உங்கள்ல சில பேருக்கு,  “இதுல என்ன பெரிய திகிலு, இது எல்லாம் ஒரு சப்ப மேட்டரு” அப்படீன்னுகூட தோனலாம். உண்மையாவே திகிலடையனும்னா வாங்க, வெடிக்கும் எரிம லைகளோட இருக்குற இந்த காணொளிகளப் பார்ப்போம்……

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: