Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விக்கிலீக்ஸ் ஆவணங்கள் பாதுகாப்பு மையம் – பரபரப்பு தகவல்

சர்வதேச நாடுகள் பற்றி பல பரபரப்பான தகவல்களை வெளி யிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் தகவல் திரட்டிகள் அட ங்கிய ஆவண ங்கள் வைக்கப்ப ட்டு ள்ள இடம் பற்றி தற்போது தகவ ல்கள் வெளி வந்துள்ளன. சுவீட னின் ஸ்டாக்ஹோம் என்ற இடத் தில் பூமிக்கு அடியில் 100 அடி ஆழத் தில் பையனென் என்ற தகவல் மையம் அமைந்துள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் பிரமாண்ட செட் மாதிரியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் தான் விக்கிலீக்ஸ் இணை யதளத்தின் ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் மையத்தில் உள்ள சூப்பர் செர்வர்கள் பல நிறுவனங்களுக்கு தங்கள் பணியினை வழங்கிவருகிறது. பெரிய குகை போல் காணப்படும் இந்த தகவல் மையம் கிரானைட்டை குடைந்து கட்டப்பட்டுள்ளது. இங்கு மிதக்கும் கருத்தரங்கு அறை, கண்ணாடி கதவுகள், மர வேலை பாடுகளுடன் அமைந்த அறைகள் ஆகியவை பார்ப் பதற்கு பிரமிப்பூட்டுகின்றன. மேலும் செயற் கையான நீர் வீழ்ச்சிகள், அடர்ந்த உயிருள்ள செடிகள், சோலார் விளக்குகள் போன் றவையும் அமைந்துள்ளன. விக்கிலீக்ஸ் வைத்துள்ள தகவ ல்கள் அனைத்தும் அதிக கொள்ளளவு கொண்ட ஒரு மெமரி ஸ்டிக்கின் உதவியால் சேமித்து வைக்க ப்பட்டுள்ளன என்றும் தகவல் தெரி விக்கிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: